ஆரத்தி எடுப்பது ஏன்?

asiriyarthagaval
0

 


அசுத்தங்களின் காரணமாக நோய்க்கிருமிகள் முதலில் உடலினுள் செல்லாமல் உடலைச் சுற்றியுள்ள ஆராப் பகுதியில்தான் தங்கி இருக்கும். 

இந்து மதத்தின் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் இப்படி ஒரு விஞ்ஞானப்பூர்வமான பொருள் பொதிந்து இருக்கின்றது.

 

 ஆரத்தி என்பது விஞ்ஞானப்பூர்வமானது. ஒவ்வொரு மனிதனின் உடலைச் சுற்றிலும் ஆரா என்ற ஒரு வட்டப் பகுதி இருக்கின்றது. தொலைதூரப் பயணங்கள் சென்று வருபவர்கள், பிரசவித்து வீடு திரும்புபவர்கள், போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மீது கூட்டம் மற்றும் அசுத்தங்களின் காரணமாக நோய்க்கிருமிகள் முதலில் அவர்களின் உடலினுள் செல்லாமல் உடலைச் சுற்றியுள்ள ஆராப் பகுதியில்தான் தங்கி இருக்கும். இவ்வாறு உடலின் ஆராப் பகுதியில் நோய்க்கிருமிகளை சுமந்துவரும் தொலைதூரப் பயணங்கள் சென்று வருபவர்கள், பிரசவித்தவர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் வீட்டிற்குள் நுழையும்முன் கிருமி நாசினிகளான மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த காவிக் கரைசல், வெற்றிலை, கற்பூர தீபம் ஆகியவை அடங்கிய தாம்பாளத்தால் அவர்களை மூன்றுமுறை சுற்றி கிருமி நீக்கம் செய்து தூய்மைப்படுத்துவதே ஆரத்தி ஆகும். இந்து மதத்தின் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் இப்படி ஒரு விஞ்ஞானப்பூர்வமான பொருள் பொதிந்து இருக்கின்றது.




Post a Comment

0Comments

Post a Comment (0)