பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதுவது எப்படி

Ennum Ezhuthum
0

 

பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதுவது எப்படி
பாடங்களை எல்லாம் முன்பே மனப்பாடம் செய்திருந்தாலும், தேர்வு நெருங்கும் நாட்களில் திரும்ப அவற்றை மனதிற்குள் வைத்து தேர்வறையில் வெற்றிகரமாக எழுதுவது தனித்திறன்.
 
மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளும்போது பெற்றோரும் மீண்டும் ஒரு தேர்வு எழுதும் மனநிலையில் பதட்டமாகவே இருக்கின்றனர். மதிப்பெண் என்ற இலக்கை அடைய &'தேர்வு காலங்கள்&' முக்கியமானவை. அதனை எப்படி பயனுள்ளதாக்குகிறோம் என்பதில் இருக்கிறது வெற்றி ரகசியம்.தேர்வு காலத்தை மாணவர், பெற்றோர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் இங்கு தினமும் விளக்குகிறார்கள்.பெற்றோர்களே. தேர்வு காலத்தில் உங்களது எதிர்பார்ப்பு, கனவுகளை பிள்ளைகள் மீது திணித்தால் அவர்களால் அழுத்தத்தை தாங்கமுடியாது.

அதற்கேற்ப படிக்கவும் முடியாது.பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண் பெற வேண்டும். அதன் மூலமே விரும்பிய பள்ளி, கல்லுாரியில் விரும்பிய பாடம் கிடைக்கும், நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியும் என்று பயமுறுத்தாதீர்கள். இதனால் பிள்ளைகளின் படிக்கும் முறையே மாறிவிடும். கூடுதல் நேரம் எடுத்து படிக்க வேண்டுமென துாக்கத்தை குறைத்து விடுவர்.

துாக்கம் தான் ஞாபகசக்திக்கு முக்கியம். 8 மணி நேர துாக்கம் அவசியம். துாக்கம் குறைந்தால் படித்த பாடங்கள் எதுவும் மனதில் நிற்காது. அவர்கள் பதட்டம் இல்லாமல் தேர்வு எழுத நீங்கள் தான் ஆறுதலாக இருக்க வேண்டும்.&'டிவி&' பார்ப்பதை தவிருங்கள்குழந்தைகளை படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள்; ஒரு மணி நேரம் கூடுதலாக படித்தால் பாராட்டுங்கள்.

அந்த பாராட்டு இன்னும் கூடுதல் நேரம் படிக்கத் துாண்டும். படி படி என வற்புறுத்தினால் உள்ளதும் கெட்டுவிடும். பணம், குடும்ப பிரச்னை இருந்தால் தேர்வு நேரத்தில் பிள்ளைகள் முன் அவற்றை எல்லாம் காண்பிக்க வேண்டாம். அதனால் மனம் பாதிக்கப்பட்டு படிப்பில் கவனம் குறையும்.

சிறிய வீடாக இருந்தால் தேர்வு முடியும் வரை &'டிவி&' பார்க்கும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். நீங்கள் சத்தம் வைத்து &'டிவி&' பார்த்து கொண்டிருந்தால் பிள்ளைகளின் கவனம் சிதறும். பிள்ளைகள் துாங்கும் போது &'டிவி&' பார்க்கலாம் என நினைப்பதும் தவறு. தேர்வு காலங்களில் அவர்கள் துாங்கும் நேரத்திலும் இடையூறு இருக்கக்கூடாது.

அவர்கள் அலைபேசியில் நீண்டநேரம் பேசுவது, &'சாட்டிங்&' செய்வதை அன்பாக சொல்லி தவிர்க்கப் பாருங்கள்.மாணவர்களுக்குமாணவர்களே, தொடர்ந்து 3 மணி நேரம் 4 மணி நேரம் என அசையாமல் ஓரிடத்தில் அமர்ந்து படிப்பது தவறு. மனிதர்களின் கவனிக்கும் திறனே அதிகபட்சம் 20 நிமிடம் தான். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடங்கள் கண்டிப்பாக இடைவெளி விட வேண்டும். எனவே 10 நிமிட இடைவெளியில் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.

பத்தில் இருந்து ஒன்று வரை தலைகீழாக எண்ணும் போது, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். ஒன்று முதல் 10 வரை எண்ணும் போது மெதுவாக மூச்சை வெளியே விடவேண்டும். இவ்வாறு 3 முறை செய்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். பழகினால் மிக எளிதாக பதட்டத்தை கடந்துவிடலாம்.நண்பர்களுடன் ஒப்பிடாதீர்கள்தேர்வு நாளில் நண்பர்களை பார்க்கும் போது, &'நீ எவ்வளவு பாடம் படித்தாய்.

எத்தனை மணிக்கு ஆரம்பித்தாய்&' என கேட்கக்கூடாது. நண்பர்கள் கூடுதலாக படித்தால்.. &'ஐயோ நாம் படிக்கவில்லையே. &'என ஒப்பிடத் தோன்றும்.

இதனாலும் பயம், பதட்டம் ஏற்படும். நண்பர்களிடம் பாடத்தில் சந்தேகம் கேளுங்கள். ஒவ்வொருவரின் படிக்கும் திறன் மாறுபடும். நண்பர்களை போல நாமும் படிக்கலாம் என புதிய முறையை அணுகக்கூடாது.

அவர்கள் என்ன படித்தார்கள்.. படித்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஆராய்ச்சி உங்களுக்கு தேவையில்லை.தேர்வெழுதும் ஹாலுக்கு செல்லும் வரை சிலர் படித்துக் கொண்டே இருப்பர். இதனால் புதிதாக மனதில் எதுவும் பதியாது. கடைசிநேர படிப்பை தவிர்ப்பதே நல்லது.

மனதை தளர்வாக, லேசாக வைத்துக் கொண்டு அரைமணி நேரத்துக்கு முன்னதாகவே ஹாலுக்கு செல்லுங்கள்.கேள்வித்தாளை பார்த்ததும் சிலருக்கு படித்ததெல்லாம் மறந்து மனப்பதட்டம் வரும். பதில் தெரியாவிட்டாலும் பதறுவார்கள். தேர்வெழுதும் போதும் மூச்சுப்பயிற்சியை நீங்கள் செய்தால் மனப்பதட்டம் குறையும். குறித்த நேரத்தில் நம்பிக்கையுடன் தேர்வெழுதி வெற்றி பெறலாம்.-டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன் மனநல மருத்துவர் மதுரைஅலைபேசி: 90060 06000

Post a Comment

0Comments

Post a Comment (0)