வெள்ளரிக்காய் கூட்டு

Ennum Ezhuthum
0
வெள்ளரிக்காய் கூட்டு

தேவையானவை:

வெள்ளரிக்காய் - 3,
பாசிப்பருப்பு - 1 கப்,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,

சீரகம் 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலையை பொடியாக கிள்ளிப்போட்டு நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

 

Post a Comment

0Comments

Post a Comment (0)