காற்று மாசுபாடு காரணமாக இதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 16% அதிகரிக்கக்கூடும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Ennum Ezhuthum
0

 

காற்று மாசுபாடு காரணமாக இதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 16% அதிகரிக்கக்கூடும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என பல்வேறு நாடுகள் தற்போது சுற்றுச் சூழல் மாசுபாட்டால் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளன.
 
காற்று மாசுபாட்டால் மனிதனின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலகெங்கிலும் உள்ள பல முக்கிய நகரங்களில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கவலை அளிக்கின்றன. அதிலும். இந்தியாவில், மிகவும் ஆபத்தான காற்றின் தர அளவுகள் பதிவாகியுள்ளன, மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.

காற்று மாசுபாட்டால், நுரையீரலில் மாசு தங்குவிடுகிறது. இதனால் சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நுரையீரலிலேயே தங்கும் நாள்பட்ட மாசினால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இவை தவிர்த்து சுவாசக் கோளாறுகளால் ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்ற நோய்க்கான வாய்ப்புகளும் உண்டாகிறது.

இந்த நிலையில் இது குறித்து JAMA Network Open இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், வீசும் காற்றில் இருக்கக்கூடிய பார்ட்டிகுலேட் மேட்டர் (Particulate matter), அதாவது தூசின் அளவு 2.5 விட்டமாக இருக்கிறது. இந்த பார்ட்டிகுலேட் மேட்டர் 2.5 (PM 2.5) இதய நோயால் இறக்கும் அபாயத்தை குறைந்தது 16 சதவிகிதம் வரை அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளது. மேலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளை இந்த துகள்களை சுவாசிப்பதன் மூலம் உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நகரும் வாகனங்கள், புகை, கட்டிடக் கட்டுமானம், தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றால் இத்தகைய மாசுபாடு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் இது குறித்து தெரிவிக்கும் ஆய்வின் முதன்மை எழுத்தாளர், ஆராய்ச்சி விஞ்ஞானி மற்றும் உயிரியல் புள்ளியியல் நிபுணரான Kaiser Permanente பிரிவைச் சேர்ந்த Stacey E. Alexeeff , ஆய்வின்படி, காற்று மாசுபாட்டால் வெளிப்படும் துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 10.0 முதல் 11.9 மைக்ரோகிராம் வரை மிதமான அளவில் இருக்குமேயானால் பெரியவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 6 சதவீதம் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஒரு கன மீட்டருக்கு 8.0 மைக்ரோகிராம் குறைவாக உள்ள மாசுபாடு, இதய நோயால் இறக்கும் அபாயத்தை 7 சதவீதமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்று மாசுபாடு காரணமாக இதய நோய் பாதிப்பால் உயிரிழப்போர் பற்றிய ஆராய்ச்சியின் இணை ஆசிரியரான ஸ்டீபன் வான் டென் ஈடன் கருத்துப்படி, குறைந்த சமூகப் பொருளாதாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே இத்தகைய அபாயம் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கிறார். ஏனெனில் அங்கு பெரும்பாலும் அதிக தொழில்துறை, பரபரப்பான தெருக்கள் மற்றும் அதிக நெடுஞ்சாலைகள் காணப்படுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளார்.

இது போன்ற காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க மாசுபட்ட காற்றை வடிகட்ட உதவும் மாஸ்க் எனப்படும் முகமூடிகளைப் பயன்படுத்தி சுவாசப் பாதைகளை தற்காத்துக்கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். ஏனெனில் மாஸ்க் எதுவும் PM 2.5 அளவில் உள்ள தூசுகளை வடிகட்ட உதவாது.எனவே முடிந்த வரை நமது சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பது நமது உடல்நலத்திற்கு பாதிப்புகள் ஏதும் வராமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)