48,500 ஆண்டு புதைந்திருந்த.. ஸோம்பி வைரஸ்களை உயிர்பிக்கும் ஆராய்ச்சியாளர்கள்.. வெளியான திடுக் தகவல்

Ennum Ezhuthum
0
48,500 ஆண்டு புதைந்திருந்த.. ஸோம்பி வைரஸ்களை உயிர்பிக்கும் ஆராய்ச்சியாளர்கள்.. வெளியான திடுக் தகவல்

48,500 ஆண்டு புதைந்திருந்த.. ஸோம்பி வைரஸ்களை உயிர்பிக்கும் ஆராய்ச்சியாளர்கள்.. வெளியான திடுக் தகவல்

ரஷ்யாவில் 48,500 ஆண்டுகளாக செயலிழந்து பனிக்கட்டிகளில் புதைந்திருந்த ஸோம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு கண்டறிந்தனர்.

 

இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என கூறப்படும் நிலையில் அதுதொடர்பான ஆராய்ச்சிகள் துவங்கி உள்ளன. இதற்காக ஸோம்பி வைரஸ்களை உயிர்பித்து ஆராய்ச்சிகள் துவங்கியுள்ள நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செயலற்று இருக்கும் வைரஸ்களை ஸோம்பி வைரஸ் என அழைக்கிறார்கள். இந்த வைரஸ்கள் வெளிவந்தால் மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஸோம்பி வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தான் அடிக்கடி ஸோம்பி வைரஸ் தொடர்பான செய்திகள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் தான் தற்போது ஸோம்பி வைரஸ் தொடர்பான ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

ரஷ்யா, கனடா, அலஸ்கா காடுகள், சீனா உள்பட பல இடங்களில் தற்போது பனிக்கட்டிகளில் புதைந்திருக்கும் நுண்கிருமிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். குறிப்பாக ரஷ்யா, கனடா, அலஸ்கா காடுகள் நீண்ட பனிபடர் பிரதேசங்களை கொண்டுள்ளது. இது முந்தைய கால வைரஸ்களின் கூடாரமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது இந்த பனி பிரதேசத்தில் ஏராளாமான வைரஸ்கள் புதைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் பிரச்சனை

மேலும் தற்போது காலநிலை மாற்றம் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளன. அதிகரித்து வரும் வெப்பத்தால் உலகில் உள்ள பனிக்கட்டிகள், பனிப்பாறைகள் உருக தொடங்கி உள்ளன. இது வரும் காலத்தில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனிக்கட்டிகளில் ஏராளமான வைரஸ்கள் புதைந்து இருப்பதாக நம்பப்படுகிறது. வேகமாக பனிக்கட்டிகள் உருகும்போது இவை வெளிப்படலாம் என கூறப்படுவதால் தான் இந்த ஆய்வுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

48,500 ஆண்டு பழமையான வைரஸ்

இந்நிலையில் தான் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் கடந்த ஆண்டு நடந்த ஆய்வில் செயலற்ற நிலையில் இருந்த வைரஸ்களை ஆராய்ச்சியாளர் கண்டறிந்தனர். இதல் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுக்கு முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த வைரஸை தான் ஸோம்பி வைரஸ் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் பல இவ்வளவு காலம் புதைந்திருந்தாலும் கூட அந்த வைரஸிடம் இன்னும் தாக்கும் குணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

உயிர்பிக்க செய்து ஆய்வு

இதையடுத்து இந்த ஸோம்பி வைரஸ் பற்றிய ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் துவங்கினர். இந்த ஸோம்பி வைரஸ்கள் வெளிப்பட்டால் அது மனிதர்களுக்கு எந்தமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் ஸோம்பி வைரஸின் தன்மையை பற்றி அறியும் வகையில் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ஜின் மைகேல் கிளாவெரி மற்றும் அவரது குழுவினர் அதனை உயிர்பிக்க செய்து ஆய்வு செய்துள்ளனர்.

ஆய்வு பற்றிய வெளியான தகவல்

இதுபற்றி யூரோ நியூஸ் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ''பழங்கால வைரஸ்களுக்கு புத்துயிர் அளித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரோமங்கள் அதிகம் உள்ள மாதிரியில் இருந்து கண்டறியப்பட்ட பித்தோ திரிபுடன் கூடிய வைரஸ் உள்பட பல பழங்கால வைரஸ்களை ஆய்வு செய்தோம். ஒரு செல் உயிரியான அமீபாவை பாதிக்கும் வைரஸ்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆய்வின் மூலமாகவே மனிதர்கள், பிற விலங்குகளை இந்த வைரஸ்கள் பாதிக்குமா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க இயலும் என நம்புகிறோம். இந்த வைரஸ்கள் வெளிப்புற சூழலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. அதாவது சூரியஒளி, ஆக்ஸிஜன், வெப்பம் உள்ளிட்டவற்றுக்கு நடுவே இந்த வைரஸ் எவ்வளவு காலம் செயல்படும். எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிவது என்பது சாத்தியமற்றதாகும். இந்த ஆய்வை தவிர்ப்பதன் மூலம் ஆபத்து இல்லாத நிலை ஏற்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு வந்த தகவல் என்ன?

முன்னதாக கடந்த பிப்வரியில் வெளியான ஆய்வின் முடிவில் ஒரு ஆராய்ச்சியாளர், ''உயிர்பிக்கப்பட்ட ஸோம்பி வைரஸ் பாதிப்பை நவீன எதிர்ப்பு மருந்துகளால் எதிர்கொள்ள முடியும் என நம்புகிறோம். அன்டிபயாடிக் உள்ளிட்டவை கைக்கொடுக்கலாம். இருப்பினும் தற்போது ஸோம்பி வைரஸ் பாதிப்புக்கு என்று தனிப்பட்ட சிகிச்சை, தடுப்பூசி எதுவும் இல்லை. இதனால் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பேரழிவை கூட ஏற்படுத்தலாம்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

0Comments

Post a Comment (0)