வந்தே பாரத் ரயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர்!

Ennum Ezhuthum
0

 

வந்தே பாரத் ரயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர்! - மத்திய அமைச்சர் பாராட்டு..!
ந்திய ரயில்வேயில் ரயில்களை இயக்கும் லோகோ பைலட் பதவிக்கு பெரும்பாலும் ஆண்களே இருந்த நிலையில், முதல் பெண்ணாக சுரேகா யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையுடன், அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

திங்கட்கிழமை அன்று மும்பையில் சோலாபூர் நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் வரை ரயிலை ஓட்டியுள்ளார். இது குறித்து மத்திய ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுரேகா யாதவ் இயக்கிய வந்தே பாரத் ரயில் 450 கி.மீ தொலைவை கடந்து, நிர்ணயித்த நேரத்திற்கு 5 நிமிடங்கள் முன்பே இலக்கை அடைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்
 
 
இந்த நிகழ்வை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார். சுரேகா யாதவ், மகாராஷ்டிராவில் சதாரா பகுதியில் இருந்து, முதல் பெண் ரயில் டிரைவராக 1988 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார். இவரின் சாதனைகளால் மாநில மற்றும் மத்திய அளவில் பல விருதுகளை வாங்கியுள்ளார். வந்தே பாரத் ரயிலை பெண் லோகோ பைலட் இயக்கியது பெருமைக்குரியதாக உள்ளது என்று பலரும் பாராட்டிவருகின்றனர்.
Dailyhunt

Post a Comment

0Comments

Post a Comment (0)