நெஞ்சு சளியை முற்றிலும் நீக்கும் கற்பூரவல்லி - வெற்றிலை ரசம் ரெசிபி!

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner

 

நெஞ்சு சளியை முற்றிலும் நீக்கும் கற்பூரவல்லி - வெற்றிலை ரசம் ரெசிபி!

மையல் என்பது கலைகளில் ஒன்று. ஏனென்றால், அனைவருக்கும் மணமான சுவையான குழம்பு வைக்க வருவதில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கைப்பக்குவம் இருக்கும். அதை பொறுத்துதான் ஒவ்வொருவரின் சமையலில் ருசி மாறுபடும். நாம் எவ்வளவு நன்றாக சமைத்தாலும் ஹோட்டலில் வைக்கும் சுவை வருவதில்லை.

அப்படி நாம் ஹோட்டலில் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று. அந்தவகையில், மிகவும் எளிமையான முறையில் செய்யப்படும் ரசம் வகைகளில் ஒன்றான மூலிகை ரசம் பற்றி பார்க்கலாம். இதை, மார்பு சளியை விரட்டும் மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 2.
புளி - நெல்லிக்காய் அளவு.
பருப்பு தண்ணீர் 1/4 கப்.
மிளகு - 1 ஸ்பூன்.
வரமிளகாய் - 4.
ஓமவல்லி இல்லை - 3.
வெற்றிலை - 2.
பூண்டு - 6 பல்.
சீரகம் - 1/2 ஸ்பூன்.
மல்லிப்பொடி - 1/2 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை.
பெருங்காய தூள் - 1 சிட்டிகை.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

மூலிகை ரசம் செய்வதற்கு முன்னதாக, தேவையான தக்காளிகளை எடுத்து பிசைந்து கூழ்ம நிலையில் தயார் செய்து, ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதேப்போன்று ஒரு சிறிய கோப்பையில் பாதியளவு தண்ணீருடன், நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து, கரைத்து புளி கரைசல் தயார் செய்துக்கொள்ளவும்.

இதனிடையே, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்க்காமல் வரமிளகாய், பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை வறுத்து, பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைக்கவும். பின்னர் அதில், ஓமவல்லி இலை மற்றும் வெற்றிலையை சேர்த்து அரைக்கவும்.


தற்போது ரசம் செய்ய, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் இதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி, மல்லிப்பொடி, பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை மாறும் நிலையில், இதனுடன் பிசைந்து வைத்துள்ள தக்காளி சாறை சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து தேவையான அளவு உப்பு, பருப்பு தண்ணீர், கரைத்து வைத்த புளிகரைசல் ஆகியவற்றை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

ரசம் நுரைக்கட்டி நன்கு கொதிக்கும் நிலையில், உப்பின் சுவையை சரிபார்த்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி துண்டுகளை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவிட சுவையான தக்காளி ரசம் ரெடி.

தமிழர்களின் உணவு வகைகளில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த ரசத்தினை, வெள்ளை சாதம், சாம்பார், பொரியல், கூட்டு ஆகியவற்றுடன் சேர்த்து சுட சுட பரிமாற வேண்டியது தான். இந்த ரசம் மார்பு சளிக்கு நிவாரணம் வழங்கும்.

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 24, March 2025