சுவையான அவியல் தயார்

Ennum Ezhuthum
0

 

அவியல்

அவியல்

தேவையானவை:

கலந்த காய்கறிகள் - கால் கிலோ
தேங்காய் - அரை மூடி
தயிர் - 200 மி.லி.

காய்ந்த மிளகாய் - 4
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடேறியதும், சீரகம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பின்னர், மஞ்சள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறி நன்கு வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஆவியில் வேகவிட வேண்டும். காய்கறி வெந்து வருவதற்குள், தேங்காய் அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயுடன்பச்சை மிளகாயை சேர்த்து சிறிது கொர கொரப்பாக அரைக்கவும். காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் வைக்க வேண்டும். பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு தயிர் சேர்க்க வேண்டும் பின்னர், மீதமுள்ள தேங்காய் எண்ணெயை சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். சுவையான அவியல் தயார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)