தேவையானவை
மீல் மேக்கர் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
பட்டை, சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
பொட்டுக் கடலை - 1 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்து மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கரைப் போட்டு ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொட்டுக் கடலையை மிக்சியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். வெங்காயம்- தேங்காய் வதக்கல் ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அடுத்து தனியாக மீல் மேக்கரை நறுக்கி மிக்சியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த மீல் மேக்கர், அரைத்த தேங்காய் விழுது, சோம்புப்பொடி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பொட்டுக் கடலை மாவு சேர்த்து, கொத்தமல்லி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். மாவை சிறு சிறு கோலா உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோலா உருண்டை களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.