மாணவர்கள், தேர்வு நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில், மனநலனில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்

Ennum Ezhuthum
0

 


மாணவர்கள், தேர்வு நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில், மனநலனில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
 
காரம், மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். பால், பழங்கள் சாப்பிடலாம்.நீண்ட தாமதத்துக்கு பின் இரவு உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற, உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடும் போது அஜீரண கோளாறு ஏற்படலாம். தேர்வின் மீதான பயத்தால் பலர் சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடாமல் விட்டு விடுகின்றனர்.

இது தவறு, சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளவில்லையெனில், அல்சர் பிரச்னை உருவாகலாம். குறிப்பாக, தேர்வுக்கு செல்லும் முன் காலை உணவு சாப்பிட வேண்டும். எளிதில் செரிக்க கூடிய உணவு நன்மை தரும்.தற்போது, வெயில் துவங்கியுள்ளதால், தினமும், 2 லிட்டர் தண்ணீர் தவறாமல் குடித்து விட வேண்டும். வைட்டமின் 'ஏ' நிறைந்த கீரை, அடர்நிறமுள்ள காய்கறிகளை உண்ண வேண்டும்; ஜீரண சக்திக்கு தயிர் நல்லது.

சரியான நேரத்துக்கு துாங்க வேண்டும்.குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது துாங்க வேண்டும். அப்போது தான் அடுத்த நாள் கவனசிதறல் ஏற்படாது.கவனக்குறைவால் தெரிந்து கேள்விகளுக்கு கூட, தவறாக பதில் எழுத வாய்ப்புள்ளது. தேர்வுக்கு செல்லும் போதும், தேர்வறையிலும் பதட்டம் கூடாது; அமைதியான மனநிலையில் இருப்பது நல்லது. சீரான ரத்த ஓட்டமே, மூளையை சுறுசுறுப்பாக்கும்.

தேர்வு எப்படி, தேர்வுக்கு பின் மதிப்பெண் எப்படி என்ற கவலை தேர்வுக்கு செல்லும் போது ஏற்படவே கூடாது. தேர்வை நன்றாக எழுதி முடிக்க வேண்டும் என்ற மனநிலை மட்டுமே இருக்க வேண்டும். 
 
இவ்வாறு, டாக்டர் கூறினார்.பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கவும் தமிழக சுகாதாரத்துறையின், 102 இலவச உதவி எண், அதற்கான மையம், 24 மணிநேரமும் செயல்படுகிறது. எப்போது வேண்டுமானாலும், மாணவ, மாணவியர் உதவி எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம்.அத்துடன், திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
 
 துாக்கமின்மை, எரிச்சல், முன்கோபம், தலைவலி, உடல்வலி, அதிகம் பசியெடுத்தல், பசியின்மை உள்ளிட்ட பிரச்னை, அறிகுறிகள் இருந்தால் மாவட்ட மனநல ஆலோசனை மையத்தில், தேவையான ஆலோசனை வழங்கப்படுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)