உடல் எடையை சட்டுனு குறைக்க இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!!

Ennum Ezhuthum
0

 

உடல் எடையை சட்டுனு குறைக்க இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!!
நாம் அனைவரும் இயல்பாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளையும் டயட்களையும் பின்பற்றி வருகிறோம்.
நீங்களும் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தால், இந்த ரெசிப்பி உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் அனைவரின் பொதுவான தேர்வு ஓட்ஸ். இதில், ஓட்ஸில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், வைட்டமின் பி6, பி1, பி2, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இது ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பினை தடுக்கிறது. அதிகரிக்கும் உடல் பருமனை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவும் ஓட்ஸ் கிச்சடியை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என காணலாம்.




தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1/2 கப்.
பருப்பு - 1/2 கப்.
சீரகம் - 1/2 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1/4 கப்.
மிளகாய் தூள் - 1/4 கப்.
வெங்காயம் - 1.
தக்காளி - 1.
கேரட் - 1.
பச்சை பட்டாணி - 1/4 கப்.
இஞ்சி/பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்.
பச்சை மிளகாய் - 2.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

முதலில், கிச்சடி செய்ய எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதேநேரம், கிச்சடி செய்ய தேவையான மற்ற பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.




தற்போது கிச்சடி செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும். இதில், கடுகு மற்றும் சீரகம் போடவும். அது பொரிந்ததும், நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை போற்று நன்றாக வதக்கவும்.

இதையடுத்து, அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இப்போது, தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மிளகாய் தூளின் பச்சை வாசம் மாறும் நிலையில், கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதன் போது கூடுதலாக சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். அடிபிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

கேரட் மற்றும் பட்டாணி ஆகியவை பாதி வெந்த நிலையில் இதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது, உப்பு மற்றும் காரத்தினை சரி பார்த்து சுவைக்கு ஏற்றபடி தேவையானவற்றை சேர்துக்கொள்ளவும்.




முதல் கொதி வந்ததும் இதில் ஓட்ஸினை பதமாக சேர்த்தப்படி கிளறி விடவும். ஓட்ஸ் நன்கு வெந்து தண்ணீர் சுண்டும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும். பின்னர், இதன் மீது கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கவிட 'ஓட்ஸ் கிச்சடி' ரெடி.

சுவையான இந்த ஓட்ஸ் கிச்சடியின் சுவையை மேலும் அதிகரிக்க இதனுடன் ஒரு கப் தயிர் அருகில் வைத்து சுட சுட பரிமாறலாம். தயிர் விரும்பாதவர்களுக்கு சட்னி சேர்த்து பரிமாறலாம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)