புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இப்படி கூட யூஸ் பண்ணலாம்...!

Ennum Ezhuthum
0

 

புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இப்படி கூட யூஸ் பண்ணலாம்...!
வாட்ஸ் அப் சேவையை பொதுவாக ஸ்மார்ட்போனில் பாதுகாப்பாகப் பயன்படுத்தி வந்தோம். அதன் புதிய அப்டேட் வசதியாக கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் சிங்க் செய்து பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இப்போது வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்காகப் பல டிவைஸ்களை ஒரே நேரத்தில், ஒரே அக்கௌன்ட் உடன் இணைக்கும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

மெட்டாவுக்குச் சொந்தமான WhatsApp இயங்குதளம், விண்டோஸுக்காகவே வடிவமைக்கப்பட்ட புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது. விண்டோஸ் டெஸ்க்டாப்பிற்கான புதிய வாட்ஸ் அப் செயலியானது மொபைல் பயன்பாட்டைப் போலவே உள்ளது.

அதேபோல், பல டிவைஸ்களில் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துவதற்கான வேகமான மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த புதிய வசதியின் படி வாட்ஸ் அப் பயனர்கள் இப்போது தங்கள் வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களுடன் இணைக்க முடியும். அவர்களின் சாட்கள் சிங்க் செய்யப்பட்டு, என்கிரிப்ட் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படும் என்றும் மெட்டா நிறுவனம் உறுதியளிக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், பயனரின் மொபைல் ஆஃப்லைனில் இருந்தாலும் கூட, மற்ற டிவைஸ்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும்.

உங்கள் வாட்ஸ் அப் கணக்கை ஒரே நேரத்தில் எப்படி 4 சாதனங்களில் இணைப்பது?

உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் முதன்மை சாதனத்தில் வாட்ஸ் அப்-ஐ திறக்கவும். Settings சென்று, Linked Devices என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Link a New Device என்பதை கிளிக் செய்யவும். பின் டிஸ்பிளேயில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். விண்டோஸ் டெஸ்க்டாப்பில் உள்ள இரண்டாவது சாதனத்தை இணைக்க, உங்கள் பிரௌசரில் web.whatsapp.com என்ற இணையப் பக்கத்தைத் திறக்கவும்.

உங்கள் இரண்டாவது சாதனம் மூலம் இணையப் பக்கத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். உங்கள் டிவைஸ் சிங்க் ஆகும் வரை காத்திருக்கவும். உங்கள் சாட்கள் இரண்டாவது சாதனத்தில் தோன்றும். கூடுதல் சாதனங்களை இணைக்க இதே செயல்முறையை மீண்டும் மற்றொரு டிவைசில் செய்யவும்.


இதன்படி நீங்கள் 4 டிவைஸ்களில் ஒரே வாட்ஸ் அப் கணக்கைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இணைக்கப்பட்ட சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை உங்கள் WhatsApp கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். WhatsApp பயன்பாட்டிலிருந்து வெளியேறுவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் சாதனத்தின் இணைப்பை நீக்கலாம்.

நீங்கள் ஒரே நேரத்தில் நான்கு டிவைஸ்கள் மற்றும் ஒரு ஃபோனைப் பயன்படுத்தலாம். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள், மீடியா மற்றும் கால்ஸ் அனைத்தும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும். இணைக்கப்பட்ட ஒவ்வொரு சாதனமும் வாட்ஸ்அப்பில் தன்னிச்சையாக இணைக்கப்படும் என்றும், அதோடு பாதுகாப்பாக இருக்குமென்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)