உயிருடன் இருக்கும் ஒருவர் அரசு விதிகளுக்குட்பட்டு தனது குடும்பத்தினருக்கு 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முடியும்.
அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு 8,086 பேர் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில், 2022ஆம் ஆண்டில் இது 12,791 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, கேரளா, தெலங்கானா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் உயிருடன் வாழும்போதே உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மரணத்திற்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 1,060 ஆக இருந்த நிலையில், 2022ஆம் ஆண்டில் 904 ஆக குறைந்துள்ளது.
மரணத்திற்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்வதாக நாடு முழுவதும் 4,48,000 பேர் பதிவு செய்துள்ள நிலையில், கேரளாவில் 1,30,000 பேரும், தமிழ்நாட்டில் 19,443 பேரும் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்