வகுப்பு 6-தமிழ் பாடக்குறிப்பு -இயல் 1 உரைநடை உலகம்

asiriyarthagaval
0

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-01-2023 முதல் 13-01-2023

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

புதுமைகள் செய்யும் தேசமிது – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழ்நாட்டில் காந்தி

6.பக்கஎண்

5 - 8

7.கற்றல் விளைவுகள்

T-614 புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

8.திறன்கள்

வாழ்வில் எளிமையின் சிறப்பை உணரும் திறன்.

சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கினைத் தெரிந்துகொள்ளும் திறன்.

9.நுண்திறன்கள்

தமிழ்மொழிமீது காந்தியடிகள் கொண்ட பற்று குறித்து அறியும் திறன்.

10.ஆயத்தப்படுத்துதல்

தேசத்தலைவர்கள் குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்ட வீரர்களைக் கூறச்செய்தல்.

11.அறிமுகம்

தமிழ்மொழியின் பெருமையைக் கூறுதல்.

காந்தி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

12.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழ்நாட்டில் காந்தியடிகளின் நிகழ்வுகள் குறித்துக் கூறுதல். தீண்டாமை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          எளிமை, இலக்கிய மாநாடு குறித்து விளக்குதல்.

          பாரதியார் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். தமிழர் குறித்தும் தமிழ் குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

13.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழரின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். காந்தி பற்றி அறியச் செய்தல். மதுரை குறித்து அறிதல்.

14.மதிப்பீடு

          LOT – காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ...........................

          MOT – காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.

                   காந்தியடிகளைக் கவர்ந்த நூல் எது?

          HOT – காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளை எழுதுக.

15.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

16.தொடர்பணி

மதுரை குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

காந்தி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


Post a Comment

0Comments

Post a Comment (0)