8ஆம் வகுப்பு தமிழ் ஜனவரி 3வது வாரம் பாடக்குறிப்பு

Ennum Ezhuthum
3 minute read
0
ads banner

 

அறிவுசால் ஔவையார் 

1. கற்றலின் விளைவுகள் : 

கல்வி அறிவில் சிறந்தவர்கள் மற்றும் நல்லொழுக்கம் மிக்க மக்களையும் கொண்டது தமிழ்நாடு என்று அறிந்து கொள்ளுதல்.

 சங்க காலத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கல்வியில் சிறந்து விளங்கினர் என்று அறிந்து கொள்ளுதல்.

 2. ஆயத்தப்படுத்துதல் : 

“அரிதரிது மானிடர் ஆதல் அரிது 

 மானிடர் ஆயினும் கூன் குருடு 

 செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது 

 பேடு நீங்கி பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தலரிது 

ஞானமும் கல்வியும் நயத்த காலையும்

தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வாராயின்

வானவர் நாடு வழித்திறந்திடுமே!'' 

மேற்கண்ட பாடலினை இராகமாகப் பாடுவதன் மூலம் ஆயத்தப்படுத்துதல். 

 3. முக்கிய சொற்கள் : 

அதியமான்- நெல்லிக்கனி 

தொண்டைமான் -தூது

 படைக்கலக் கொட்டில்

 குருதிக்கறை 

போர்க்களம்

 
4. கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்: 

மின்னட்டைகள், பொருத்தட்டைகள், தொடர்அட்டைகள். 

5.வாசித்தல் : 

ஆசிரியர் பாடம் முழுவதையும் ஒருமுறை வாசித்தல். பின்பு பத்தி வாரியாக மாணவர்களை வாசிக்கச் சொல்லுதல்.

 6. கருத்து வரைபடம் : 



7. தொகுத்தல் : 
___________________________________________________________________________________
வ.எண்                                              பாடப்பொருள் குறித்த தகவல்கள்
___________________________________________________________________________________                                                         
                                                              அதியமான் அவையில் ஔவையார் எனும்                        1.                                                      புலவர்  இருக்கிறார். இவரிடம் தொண்டை                                                                              நாட்டுமன்னன் போரிட இருப்பதாகவும், தான்                                                                     போரினை விரும்பவில்லை என்றும் அதியமான்                                                                   குறிப்பிடுகின்றார். 
___________________________________________________________________________________
                                                               ஒளவையாரும் தொண்டைமான் நாட்டிற்கு                        2.                                                    செல்கின்றார். அங்கு ஒளவையாரினை                                                                                    வரவேற்ற தொண்டைமான் தன்னுடைய                                                                                 போர்க்கருவிகள் புதிதாக தயார் நிலையில்                                                                            உள்ளன என்று கூறினான். 

___________________________________________________________________________________
8. பரிந்துரைக்கப்படும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்: 

விரிவுரை முறை: 

தமிழகத்தில் உள்ள தர்மபுரி என்ற மாவட்டமே முற்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்டது எனவும், தகடூரினை அதியமான் என்பவர் ஆட்சி செய்து வந்தார் எனவும், அவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் எனவும் ஆட்சியில் சிறந்து விளங்கிய அவர் தனது அண்டை நாடுகளுடன் போரிட விரும்பவில்லை.

ஏனெனில் அயலவனுடன் போர் புரிவது வேறு, நமது அண்டை நாட்டினருடன் போர் புரிவது என்பது வேறு, இதனால் பல குடும்பங்களில் உயிரிழப்பு, நாட்டில் பொருளாதார வீழ்ச்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளினை தவிர்ப்பதற்கு ஔவையாரினை தூதாக அனுப்பினார். 
குழுக்கற்றல் முறை : 

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினரை அதியமான் குறித்த தகவல்களையும், மற்றொரு குழுவினரை தொண்டைமான் குறித்த பல்வேறு தகவல்களையும் சேகரித்து குழுவாகக் மற்றொரு குழுவினரை கலந்து விவாதிக்கச் சொல்லுதல். 

தானே கற்றல் முறை : 

ஒளவையார் எழுதியுள்ள ஏதேனும் ஒரு பாடலினை பள்ளி நூலகம் (அ) முந்தைய வகுப்புகளில் கற்றதை நினைவு கூர்ந்து எழுதச் சொல்லுதல்.

 9. வலுவூட்டுதல்: 

கொடுக்கப்பட்ட பாடப்பகுதியை சூழலோடு கலந்துரையாடி குழு விவாதம் செய்தல். 

10. மதிப்பீடு : 

1. அறிவுசால் ஔவையார்- என்னும் நாடகத்தை சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக. 

இது போன்ற பல்வேறு வினாக்கள் மூலம் மதிப்பீடு செய்தல் வேண்டும்.

 11. குறைதீர் கற்பித்தல் : 

மையக் கருத்தின் புரிதல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை கற்பித்தல். 

12. தொடர் செயல்பாடு : 

ஆசிரியர் மாணவர்களிடம் கடையெழு வள்ளல்களின் பெயர்களையும், அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளின் பெயர்களையும் அட்டவணைப்படுத்தி எழுதச் சொல்லுதல்.
ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 1, April 2025