தேவையான பொருட்கள் :
சிக்கன் லெக்ஸ் - 5
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி & பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
சோம்பு தூள்(விரும்பினால்) - 1 பின்ச்
வெங்காயம் - 2 தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை (விரும்பினால் தேங்காய் எண்ணை) - 4 ஸ்பூன்
செய்முறை:
சிக்கனில் மஞ்சள், மிளகாய், உப்பு, கரம் மசாலா,சோம்பு தூள் மற்றும் இஞ்சி &பூண்டு விழுது சேர்த்து 2 மணி நேரம் ஊற விடவும். பின்பு எண்ணையை ஒரு பெரிய கடாயில் காய வைத்து அதில் சிக்கன் கால்களை போட்டு பிரட்டி விடவும் சிறிது நேரத்தில் நீர் விடும் பின்பு நீரை வற்ற வைக்கவும். சுமார் 15-20 நிமிடங்களில் சிக்கன் கால்கள் முக்கால் பாகம் வெந்த பின்பு பச்சையாக நறுக்கிய வெங்காயம் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விடவும். நன்கு வற்றி ரோஸ்ட் போல வரும் வரை தீயை குறைத்து பிரட்டி விடவும் சுவையான சிக்கன் லெக் ரோஸ்ட் ரெடி.