இவ்வளவு தான் வாழ்க்கை

Ennum Ezhuthum
0

 




ஒரு ஊருக்கு மிகப்பேரிய ஒரு ஞானி வந்து தங்கியிருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை தரிசித்து தங்கள் குறைகளை சொல்லி அதற்கு பரிகாரமும் கேட்டு வந்தார்கள். ஒரு நாள் அந்த ஞானியிடம் வாழ்க்கையில் மிகவும் சலிப்புற்ற ஒருவன் வந்தான். அவன் ஞானியை வணங்கி
, தனது வாழ்க்கை வெறுமையாக இருப்பதாகவும் அதற்கு அவரே ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான்.

எற்கனவே  வாழ்க்கையில் சலிப்புற்று இருக்கும் அவனுக்கு உபதேசம் செய்தால் சரிபட்டு வராது என்று தெரிந்துக் கொண்ட அந்த ஞானியும், தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருந்து கொள்.அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார். காலையில் ஏற்றி வரும்போதும் மாலையில் திரும்பும்போதும் அதனை கவனித்துப் பார். நீ கவனித்ததை என்னிடம் வந்து சொல் "என்று கூறினார்.

 

மறுதினம் பொழுது புலர்ந்தது. குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார் சலவை தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.

 

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் காலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லையே” எனக் கூறினான்.

 

"அன்பனே,காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் இல்லை. அதே போல் மாலையில் சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் அந்த கழுதையிடத்தில் இல்லை.துன்பம் வரும்போது அதிக துக்கமும்,இன்பம் வரும்போது அதிக சந்தோசமும் இல்லாமல், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே சிறந்த ஞானம்" என்றார்.

 

மகிழ்சியையும்,துன்பத்தையும் சரி சமமாக பாவிப்பவர்களுக்கு எல்லா நாளும் இனிய நாளே.

Post a Comment

0Comments

Post a Comment (0)