காடை கிரேவி செஞ்சிருக்கீங்களா..? டிரை பண்ணி பாருங்க..!

Ennum Ezhuthum
0

 



ழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த காடை கிரேவியை ட்ரை பண்ணி பாருங்கள்.
அப்புறம் வாரம் வாரம் வாங்கி சாப்பிடுவீர்கள். சுவை அபாரமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

காடை -2

பெரிய வெங்காயம் -1

தக்காளி -1

மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்

மிளகுத்தூள்-1ஸ்பூன்

மல்லித்தூள்-1ஸ்பூன்

மஞ்சள்தூள்-1/2ஸ்பூன்

கரம் மசாலா -1/2 ஸ்பூன்

உப்பு -தேவைக்கு

கருவேப்பிலை - 1 கொத்து

அரைக்க:

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழையை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தேங்காய் -3 துண்டுகள், சோம்பு-1/2ஸ்பூன் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தாளிக்க:
எண்ணெய், பட்டை ,கிராம்பு, பிரிஞ்சி இலை-தலா1
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்

செய்முறை:

1. அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து தனியே எடுத்து வைக்கவும் .

2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு , தாளிக்க கொடுத்த வற்றை சேர்த்து தாளிக்கவும் .

3. பின் இதனுடன் வெங்காயம் ,சேர்த்து பொன்னிறமானதும் தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .

4. பின் இதனுடன் மிளகாய்தூள், மிளகுதூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கர மசாலா தூள் என அனைத்தையும் சேர்த்து, அதனுடன் காடை துண்டுகள் , உப்பு சேர்த்து வதக்கவும் .

5. தேவையான அளவு நீர் விட்டு, மூடி வேக விடவும் .

6. குக்கர் என்றால் ஒரு விசில் போதுமானது . பாத்திரம் என்றால் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சரி பார்த்து இறக்க வேண்டும். வெந்ததும் மல்லித்தழை தூவி இறக்கினால் காடை கிரேவி ரெடி. . இதனை சூடான சாதம் அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)