நாட்டு மருந்து சாப்பிட்டால் ஏன் பத்தியம் இருக்க சொல்கிறார்கள்?

asiriyarthagaval
1 minute read
0
ads banner

 


ஒவ்வொரு நாட்டு மருந்திலும் ஒவ்வொரு மூலிகைகள் இருக்கும். சில மூலிகைகள் சில உணவோடு கலந்தால் வேலை செய்யாது அல்லது விஷமாக மாறும். 

எனவே நாட்டு மருந்து எடுக்கும் நபர்கள் சில பொருட்களை, காய்கறிகள், பழங்களை, சுவைகளை சாப்பிடக்கூடாது என்பார்கள். ஒருவேளை பத்தியம் கடைப்பிடிக்காமல் இருந்தால் அந்த மருந்து விஷமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

 அல்லது அது வேலை செய்யாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. உதாரணமாக கேரட்டை மூலப்பொருளாக வைத்து செய்யப்பட்ட மருந்தை எடுக்கும் போது ஆரஞ்சு பழம் சாப்பிட கூடாது.

 ஏனென்றால் கேரட் ஆரஞ்சுப் பழம் இரண்டும் கலந்தால் மருந்து வேலை செய்யாது. பசும்பாலை மூலப்பொருளாக கொண்டு மருந்து எடுக்கும் போது அண்ணாச்சி பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அன்னாச்சி பழமும் பாலும் சேர்த்தால் மருந்து வேலை செய்யாது. 

ஆரஞ்சுப் பழத்தை மூலப்பொருளாக கொண்டு தயாரித்த மருந்து எடுக்கும் போது பால் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் ஆரஞ்சு பழமும் பாலும் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது. வாழை பழத்தை மூலப்பொருளாக கொண்டு உருவாக்கப்படும் மருந்து எடுக்கும் போது எலுமிச்சை பழம் சாப்பிடக் கூடாது. 

ஏனென்றால் வாழைப்பழமும் எலுமிச்சை பழமும் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது. எலுமிச்சை பழத்தை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து எடுக்கும் போது, பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் எலுமிச்சை பழமும் பப்பாளி பழமும் சேர்ந்து சாப்பிட்டால் மருந்து வேலை செய்யாது.

 பொதுவாக நாட்டு மருந்து கொடுக்கும் பொழுது அகத்திக்கீரை சாப்பிடக் கூடாது என்று பத்தியம் சொல்வார்கள். உடனே நீங்கள் அகத்திக் கீரை உடலுக்கு கெடுதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அகத்திக் கீரை சாப்பிட்டால் அது உடலிலுள்ள மருந்துகளை, கெமிக்கல்களை வெளியே தள்ளிவிடும்.

 எனவே மருத்துவர் கொடுத்த மருந்து வேலை செய்யாது. எனவேதான் அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது என்று பத்தியம் கூறுகிறார்கள். எனவே, பல வருடமாக ஆங்கில மருந்து சாப்பிட்டு பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி அகத்திகீரை சாப்பிடுங்கள். அப்போதுதான் மருந்து, மாத்திரையால் உண்டான கழிவுகள் உடம்பில் இருந்து வெளியே செல்லும்.


ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 1, April 2025