என்ன பூமியின் உள்மையம் சுழல்வதை நிறுத்தி விட்டதா?! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சர்ய தகவல்!

Ennum Ezhuthum
0

 

என்ன பூமியின் உள்மையம் சுழல்வதை நிறுத்தி விட்டதா?! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சர்ய தகவல்!

பூமியின் ஒருபக்கம் துளையிட்டு மறுபக்கம் செல்லமுடியுமா? இயலாது தான்.

ஆனால் ஆய்வாளர்கள் பூமியின் மையப்பகுதியில் துளையிட்டால் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை பலநாடுகளும் ஆராய்ந்து வருகிறார்கள்.

அவ்வாறு ஆராய்சிக்காக பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர் டீப் சுமார் 12.26 கிலோமீட்டர் தூரத்திற்கு துளையிடப்பட்டது. இதற்கே 20 ஆண்டுகள் ஆய்வாளருக்கு தேவைப்பட்டது என்கிறார்கள். அவ்வாறு துளையிட்டபோது 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம், பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதி அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும் என அவர்களின் ஆய்வில் தெரியவந்ததால் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டிருந்தனர். இருந்தாலும் அவர்களின் ஆய்வு தற்பொழுது வரை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.

பூமியின் மேற்பரப்பு, ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழமாக சென்றாலும் அந்த சுழற்சி இருந்துகொண்டே இருக்கிறது என்ற ஆய்வின், அடுத்த கட்டமாக, ஆய்வாளர்கள் தற்பொழுது ஒரு முக்கிய விஷயத்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.

அதாவது,

பூமியின் உள் மையமானது, சூடான இரும்பு பந்து (திரவ உலோகம்) தன் சுழற்சியை நிறுத்தி, எதிர் திசையில் சுழலத் தொடங்கியது என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம், பூமியின் மையமானது நாம் வாழும் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) கீழே உள்ளது, இந்த "கிரகத்திற்குள் கிரகம்" அதாவது திரவ உலோக பந்து வெளிப்புற மையத்தில் மிதப்பதால் அதனால் சுயாதீனமாக சுழல முடியும் என்று AFP அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் சில விஞ்ஞானிகள் உள் மையமானது எவ்வாறு சுழல்கிறது என்பதை விவாதித்து வருகின்றனர்.

இது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர், உள் மையத்தின் சுழற்சி "2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியது" என்று கண்டறிந்து கூறி வருகிறார்கள். இவர்கள் பூமியைப்பற்றி கூறும் பொழுது, "பூமியின் மேற்பரப்புடன் அதன் உள்மையத்தை ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலைப் போல சுழல்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். 

ஊஞ்சலின் ஒரு சுழற்சி சுமார் எழுபது ஆண்டுகள் ஆகும், அதாவது ஒவ்வொரு 35 வருடங்களுக்கு ஒருமுறை இது தன் திசையை மாற்றுகிறது, அதாவது,1970 களின் முற்பகுதியில் இது திசை மாறியதாகவும், அடுத்த மாற்றம் 2040 களின் நடுப்பகுதியில் இருக்கும். இந்த சுழற்சியானது "நாளின் நீளம்" என்று அழைக்கப்படும். மேலும், பூமி அதன் அச்சில் சுழற்ற எடுக்கும் நேரத்தில் மேற்புறத்தில் சிறிய மாறுபாடுகள் ஏற்படும்' என்கிறார்கள்.

மேலும், உள் மையமானது மேற்பரப்பில் வசிப்பவர்கள் மீது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு இதுவரை எதுவும் ஆதாரம் இல்லை. ஆனால் பூமியின் அனைத்து அடுக்குகளுக்கும், உள் மையத்திலிருந்து மேற்பரப்பு வரை உடல்ரீதியான தொடர்புகள் இருப்பதாக அவர்கள் நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வில் ஈடுபடாத வல்லுநர்கள், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் குறித்து, தங்களின் வேறு பல கோட்பாடுகளை சுட்டிக்காட்டி, பூமியின் மையத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். அது என்ன என்பதை பார்கலாம்.

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், 'கடந்த பத்தாண்டுகளில் பூமியின் உள் மையமானது சுழல்வதை நிறுத்திவிட்டதாகவும், இப்போது எதிர் திசையில் சுழலக்கூடும்' என்றும் கூறியுள்ளனர். நேச்சர் ஜியோசைன்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது,

'பூகம்பத்திலிருந்து வரும் நில அதிர்வு அலைகளை கவனித்ததில், இது பூமியின் மேற்பரப்பு சூழலை பாதித்தாலும், கால இடைவெளியில் ஏற்படும் சுழல் கிரகத்தில் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது'

என நிபுணர்கள் நமக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு நிபுணரான ஜான் விடேல் கூறுகையில்,

"இது நிறைய தரவுகளை வைத்து சிறந்த விஞ்ஞானிகள் சேர்ந்து மிகவும் கவனமாக செய்த அராய்சிகள் எல்லாம், சரியான முடிவை நன்றாக விளக்கவில்லை என்பது எனது கருத்து"

என்று அவர் கூறுகிறார்.

விடேல் என்ற விஞ்ஞானி கடந்த ஆண்டு தனது, ஆராய்ச்சியை வெளியிட்டார், அதில்,

'பூமியின் உள் மையமானது மிக விரைவாக ஊசலாடுகிறது, அது, ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை திசையை மாற்றுகிறது. 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் இரண்டு அணு வெடிப்புகளால் ஏற்பட்ட நில அதிர்வு அலைகளை, அடிப்படையாகக் கொண்டு பூமியின் உள் மையமானது ஊசலாடுகிறது'

என்று தெரிவித்தார். மேலும் 'உள் மையமானது 2001 முதல் 2013 வரை குறிப்பிடத்தக்க அளவில் நகர்ந்தது, அதன் பின்னர் தன் நகர்வை நிறுத்திக்கொண்டது'என்கிறார்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளரான Hrvoje Tkalcic என்பவர், தனது சமீபத்திய ஆய்வின் முடிவில் உள் மையத்தின் சுழற்சியானது ஒவ்வொரு 20 முதல் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதாகவும். மேலும் இந்த கணித மாதிரிகள் பெரும்பாலும் தவறானவையாகத்தான் இருக்கக்கூடும், ஏனெனில் இவை கவனிக்கப்பட்ட தரவை தான் விளக்குகின்றன, எனவே, இந்த கண்டுபிடிப்பு சர்ச்சைக்குரியதாகவே இருக்கும்." என்கிறார்.

இவர் நில அதிர்வு நிபுணர்களை மருத்துவர்களுடன் ஒப்பிட்டார். ஏனெனில்

"ஒரு மருத்துவர், CT ஸ்கேன் போன்ற சரியான உபகரணங்களைப் பயன்படுத்தி தான் நோயாளிகளின் உடலின் உள் உறுப்புகளைப் படிக்க முடியும் அதுபோல் பூமியின் உள்பாகத்தை பற்றி அறிந்துக்கொள்ள CT ஸ்கேன் போன்று ஒரு உபகரணம் இல்லாததால் "உள் பூமியின் எங்கள் படம் இன்னும் மங்கலாக உள்ளது"

என்கிறார்.


Post a Comment

0Comments

Post a Comment (0)