சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை வரும் நாள்களை எடுத்துக் கொண்டு பார்த்தால் அந்த நாள்களில் நடக்கின்ற சம்பவங்களை வைத்து சனிப் பெயர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா? ஜோதிட ஆர்வலர்களிடையே இன்னமும் இதுபற்றிய குழப்பம் தீர்ந்தபாடில்லை.
இரண்டு தேதிகளையும் குறிப்பிட்டுப் பேச ஜோதிட வல்லுநர்கள் இருக்கிறார்கள். இவ்விஷயத்தில் பெரிய ஜோதிடர்களேகூட இரண்டாகப் பிரிந்துகிடக்கிறார்கள். உள்ளபடியே திருக்கணிதம், வாக்கியம் என இரு வகைப்பட்ட பஞ்சாங்கங்களைப் பின்பற்றுவதன் அடிப்படையில்தான் இந்தக் குழப்பமே நேரிடுகிறது. இரண்டையொற்றியும் ஜோதிடர்கள் கணிப்புகளைச் செய்கிறார்கள், பலன்களைத் தெரிவிக்கிறார்கள். இதையும் படிக்க.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? தமிழகத்திலுள்ள பெரும்பாலான அல்லது அனைத்துக் கோவில்களிலுமே வாக்கியப் பஞ்சாங்கம் பின்பற்றப்படுகிறது. இதனால் வாக்கியப் பஞ்சாங்கமே சரி என்பதற்கான ஆதரவும் இருக்கிறது. ஆனால், தமிழகம் தவிர்த்த பிற பகுதிகள் அனைத்துமே, கோவில்கள் உள்பட திருக்கணிதப் பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றன.
ஆனால், அண்மைக்காலமாக திருக்கணிதப் பஞ்சாங்கத்தைப் பற்றிப் பேசுவோரும் பின்பற்றுவோரும் கணிசமான அளவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் இதுபற்றி நிறையப் பேசுகின்றனர். சமூக ஊடகங்கள், யூ டியூப் எல்லாவற்றிலும் ஜோதிடப் பலன்கள் நிரம்பிவழியும் நிலையில் இதுபற்றிய விவாதம் விறுவிறுப்படைகிறது. உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் நிறுவனரும் பத்திரிகை ஊடகவியலாளருமான வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத், திருக்கணித பஞ்சாங்கத்துக்கு ஆதரவான வாதங்களை முன்வைப்பதுடன், திருக்கணிதப் பஞ்சாங்கத்தையே கோயில்களிலும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பஞ்சாங்கம் எனும் ஐந்திறம் ஆண்டுக்கொரு முறை கோள்கள், நட்சத்திரங்களின் இருப்பு, சுழற்சி, போக்கு, மாற்றம் ஆகியவற்றைக் கணித்து எழுதப்படும் ஒரு கையேடு. அதாவது, ஓர் ஆண்டில் எந்தக் கோள்கள், எந்த நட்சத்திரங்கள் எப்படி, எந்த நாள், எந்த நேரம் நகருகின்றன என்பதை சுட்டிக்காட்டும் கணக்கீட்டுக் கையேடு. இதை வைத்துதான் சந்திரன் நகருகிறார், சூரியன் நகருகிறார், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என்றெல்லாம் ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மையில் ஐந்திறம் எனும் பஞ்சாங்கம் ஒரு வியக்கத்தக்க கணக்கீட்டு முறை. ஒவ்வொரு நாள் காலையில் சூரிய உதயம் தொடங்கி இரவு வரையிலான கோள்களின் நகர்வுகளைக் கணக்கில்கொண்டு அடுத்தடுத்து அந்தக் கோள்கள் எப்படி சுழல்கின்றன என்று ஒரு ஆண்டு மொத்தமும் கணிக்கும் கணிதம் இது.
கடந்த 13 ம் நூற்றாண்டு வரை திருக்கணித பஞ்சாங்கமே பின்பற்றப்பட்டு வந்தது. இது மயன் காலக் கணக்கீடு. ஆர்யபட்டர் பின்பற்றியது. இந்த திருக்கணிதத்தின் கணக்கீடுகள் அறிவியல் மற்றும் நடைமுறை அடிப்படையில் ஒத்துப்போகக்கூடிய முறைகள். அதாவது, கோள்களின் நகர்வுகள் ஒரே மாதிரியாக எப்போதும் நகர்வதில்லை. கோள்களின் ஈர்ப்பு ஆற்றலுக்கு ஏற்ப நகர்வுகள் மாறுகின்றன என்பதன் அடிப்படையில் கணிப்பது திருக்கணிதம். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால், வாக்கிய பஞ்சாங்கம் இந்தியா முழுவதும் சூரிய உதயம் ஒரேநேரத்தில் நடப்பதாகக் கணிக்கிறது. இது அறிவியலுக்கும், நடைமுறைக்கும் எந்தவிதத்திலும் ஏற்புடையது ஆகாது. சென்னையில் சூரியன் உதிக்கும் நேரத்திற்கும் அசாம் மாநிலத்தில் உதிப்பதற்குமே மணிக் கணக்கில் நேரம் வேறுபடுகிறது. சென்னைக்கும் கோயம்புத்தூருக்குமேகூட நேரம் சிறு அளவில் வேறுபடும்.
ஆனால் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில அந்தந்த ஊரின் இட அமைவுக்கு ஏற்ப சூரிய உதயம் கணிக்கப்படுகிறது. கோள்களின் சுழற்சிகள் ஒரு குறிப்பிட்ட காலக்கணக்கில் சுழலுகின்றன என்பதை உறுதிப்படுத்தியாயிற்று. அதாவது 360 பாகை (டிகிரி) வட்டத்துக்குள் சூரியக் குடும்பத்தின் கோள்கள் சூழல்கின்றன எனில், இவற்றுள் ஒரு 30 பாகை அதாவது 30 நாள்களை சந்திரன் கடக்க இரண்டே கால் நாள், சூரியன் ஒரு மாதம், குரு ஒரு ஆண்டு, சனி இரண்டரை ஆண்டு என ஒரு நிரந்தரக் கணக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சுழற்சிகளின்போது ஈர்ப்பு விசைகளில் வலிமையுடைய கோள்கள் பிற கோள்களைத் தங்களை நோக்கி இழுக்கும். எடுத்துக்காட்டாக, ஈர்ப்பு விசையில் வலிமை குறைந்த சந்திரனை இன்னுமொரு பெரிய ஈர்ப்பு விசையுள்ள கோள் இழுக்கும்போது சந்திரனின் அல்லது பிற கோள்களின் சுழலும் வேகம் குறையலாம் அல்லது பின்னோக்கியோ, அதே இடத்திலோ சுழன்று கொண்டிருக்கலாம்.
ஆனால், வாக்கியப் பஞ்சாங்கம் இதையெல்லாம் கணக்கில்கொள்வதில்லை. முதன்முதலாக எழுதப்பட்ட வாக்கியப் பஞ்சாங்கத்தை ஆண்டுக்கொரு முறை அப்படியே கூட்டிக் கணக்கிட்டு எழுதிவிடுகிறார்கள். கோள்களின் நடைமுறை மாற்றங்களைக் கணக்கில் கொள்வதில்லை. இன்னமும் புரியும்படியாகக் கூறினால், பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 365 நாட்கள் 6 மணிநேரம் 9 நிமிடங்கள். திருக்கணிதம் இந்தக் கணக்கின் அடிப்படையிலானது.
ஆனால் வாக்கியப் பஞ்சாங்கம் 9 நிமிடங்களுக்குப் பதிலாக 12 நிமிடங்கள் என்று கணக்கிடுகிறது. இப்படி 3 நிமிடங்கள் கூடுதலாகக் கணக்கிட்டுக் கணக்கிட்டு இன்று மாதக்கணக்கில் இதன் வேறுபாடு நடைமுறை சுழற்சிக் கணக்கில் இருந்து விலகி வேறுபட்டு நிற்கிறது. அதாவது திருக்கணிதக் கணக்கின்படி 2023 ம் ஆண்டு சனிப் பெயர்வு அதாவது அதன் அடுத்த 30 பாகைக்கான நகர்வு ஜனவரி 17-ம் தேதி. உண்மையில் வாக்கியப் பஞ்சாங்கம் இந்தப் பெயர்வு நேரத்திலிருந்து 3 நிமிடங்கள் அல்லது சில நிமிடங்களே வேறுபட்டு நிற்க வேண்டும்.
ஆனால், 3 மாதங்கள் வேறுபட்டு நிற்கிறது. திருக்கணிதம் இருக்கும்போது எதற்காக வாக்கியம் தோன்றியது? 13 ம் நூற்றாண்டு வரை நடைமுறையில் திருக்கணித பஞ்சாங்கம் இருந்த நிலையில் அதன் கணக்கீடுகள் மிக நுட்பமாக இருந்த காரணத்தால் சற்று எளிமைப்படுத்தி வாக்கியப் பஞ்சாங்கம் எனும் பெயரில் வரருசி எனும் சோதிடர் வெளியிடுகிறார். ஆனாலும் அதேவேளையில், தமது இந்தக் கண்டுபிடிப்பை ஆய்ந்து பார்த்து காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்துகிறார். ஆனால் அது அடுத்து ஆராயப்படவுமில்லை, திருத்தங்களும் செய்யப்படுவதுமில்லை.
அப்படி அப்படியே மறுபதிப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டுக் கோயில்களில் வாக்கியப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது. இதையும் படிக்க.. சனியின் பிடியிலிருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்! கடந்த 1930களில் திருக்கணிதமா? வாக்கியமா? என்று ஓர் ஆலோசனைக் கூட்டம் காஞ்சி மடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில்தான் "கோயில்களுக்கு வாக்கியம், மனிதர்களுக்கு திருக்கணிதம்" என்று காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால், இப்போதும் காஞ்சி மடத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கம்தான் பின்பற்றப்படுகிறது.
கடந்த 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பதியில் கூடிய சோதிட மேதைகள் திருக்கணிதப் பஞ்சாங்கமே துல்லியம் சார்ந்தது என முடிவெடுக்க, திருப்பதி கோயிலிலும் அன்று முதல் திருக்கணிதமே பின்பற்றப்படுகிறது. ஆக, தமிழ்நாட்டுக்குள் மட்டும்தான் இந்த வாக்கியப் பஞ்சாங்கம். திருக்கணிதமே இப்போதைய அளவில் துல்லியம் சார்ந்தது என்பதால் திருக்கணிதமே முன்னிறுத்தப்பட வேண்டும். முதல்கட்டமாகக் கோயில்களில் இருந்து வாக்கியப் பஞ்சாங்கம் விலக்கப்பட வேண்டும். இது காலத்தின் தேவை என்கிறார்கள் அறிவார்ந்த சோதிட வானியல் வல்லுநர்கள். பஞ்சாங்கம் என்பது ஏதோ பக்திப் புத்தகம் அல்ல. அது ஒரு லைவ் மேப்" என்று குறிப்பிடுகிறார் வளர்மெய்யறிவான்.
ஆனால், இவற்றையெல்லாம் வாக்கிய பஞ்சாங்கத்தைப் பின்பற்றுவோர் ஒப்புக்கொள்வதில்லை. கோவில்களில் பின்பற்றப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றனர். திருக்கணிதப்படியான சனிப்பெயர்ச்சியே சரி. தனிப்பட்ட ஜாதகங்களை வைத்து ஒப்பிட்டுப் பார்க்க, ஜனவரி 17-ல் சனிக் கோள் நகர்ந்து கும்பத்துக்குச் சென்றுவிட்டது என்று உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது என்கிறார் ஜோதிட ஆய்வாளர் நித்ய ஸந்யாஸ்.
ஓரளவு ஜாதகங்கள் பற்றி அறிந்த ஒவ்வொருவருமே சில விஷயங்களை வைத்து சனிப் பெயர்ச்சியையும் பலன்களையும் உறுதி செய்ய முடியும் என்னும் அவர் மேலும் கூறுகிறார்:
சனிப் பெயர்ச்சி காரணமாக ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை வரும் நாள்களை எடுத்துக் கொண்டு பார்த்தால் அந்த நாள்களில் நடக்கின்ற சம்பவங்களை வைத்து சனிப் பெயர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாகத் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியுடன் ஏழரை சனி முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த சனியின் நட்சத்திரங்கள் வரும் நாள்களில் - இவ்வளவு காலமாக இந்த நாள்களில் இருந்துவந்த - அழுத்தங்களும் நெருக்குதலும் குறைந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். திருக்கணிதப்படி கும்பத்துக்கு சனி பெயர்ந்த நிலையில், தற்போது இந்த நட்சத்திர நாள்களில் மேஷம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் ஓரளவு சாதகமான நிலையை உணர முடியும், குறைந்தபட்சம் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. இதையும் படிக்க..
சனிப்பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு! மகரத்துக்கு பாத சனி, கும்பத்துக்கு ஜன்ம சனி, கடகத்துக்கு அஷ்டமத்து சனி. எனவே, இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகத்துக்கு அர்த்தாஷ்டம சனி, சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கலாம். இவற்றை வைத்து சனிப் பெயர்ச்சியை உறுதி செய்துகொள்ள முடியும்." சனிப் பெயர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொருவிதமான பலன்கள் இருக்கும். பொதுவெளியில் நிறைய பேசப்படும் இவை யாவும் பொதுப் பலன்கள் மட்டுமே. ஒரு ஜோதிடர் சொல்கிறார் என்பதற்காக அப்படியே இருக்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும் என்றெல்லாம் கட்டாயமில்லை.
ஏனெனில், ஒவ்வொருவரின் தசா புத்திகளைப் பொருத்து அவரவருக்கான பலன்களில் வேறுபாடுகள் இருக்கும். ஜோதிடம் என்பது மாபெரும் கணிதக் - கணிப்புக் கடல். கற்றுக் கரை கண்டவர்கள் என்று எவரொருவரையும் குறிப்பிட்டுவிட முடியாது. ஜோதிடத்தில் விதிகள் எத்தனை இருக்கின்றனவோ அவற்றைவிட அதிகமாக விதிவிலக்குகளும் இருக்கின்றன என்பார்கள். ஆர்வமுள்ளவர்கள் அவரவரே ஓரளவு அறிந்துகொள்ளலாம். சனி பெயர்ச்சி எப்போது என்பதையும்கூட இவற்றை வைத்து உறுதிசெய்து கொள்ளலாம்.
சனிப்பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு! மகரத்துக்கு பாத சனி, கும்பத்துக்கு ஜன்ம சனி, கடகத்துக்கு அஷ்டமத்து சனி. எனவே, இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகத்துக்கு அர்த்தாஷ்டம சனி, சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கலாம். இவற்றை வைத்து சனிப் பெயர்ச்சியை உறுதி செய்துகொள்ள முடியும்." சனிப் பெயர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொருவிதமான பலன்கள் இருக்கும். பொதுவெளியில் நிறைய பேசப்படும் இவை யாவும் பொதுப் பலன்கள் மட்டுமே. ஒரு ஜோதிடர் சொல்கிறார் என்பதற்காக அப்படியே இருக்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும் என்றெல்லாம் கட்டாயமில்லை.
ஏனெனில், ஒவ்வொருவரின் தசா புத்திகளைப் பொருத்து அவரவருக்கான பலன்களில் வேறுபாடுகள் இருக்கும். ஜோதிடம் என்பது மாபெரும் கணிதக் - கணிப்புக் கடல். கற்றுக் கரை கண்டவர்கள் என்று எவரொருவரையும் குறிப்பிட்டுவிட முடியாது. ஜோதிடத்தில் விதிகள் எத்தனை இருக்கின்றனவோ அவற்றைவிட அதிகமாக விதிவிலக்குகளும் இருக்கின்றன என்பார்கள். ஆர்வமுள்ளவர்கள் அவரவரே ஓரளவு அறிந்துகொள்ளலாம். சனி பெயர்ச்சி எப்போது என்பதையும்கூட இவற்றை வைத்து உறுதிசெய்து கொள்ளலாம்.