2020-21 -ம் ஆண்டில் தேசிய அளவில் தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 7.17% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், இதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவு பயன்படுத்தப்படுள்ளன.
முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்பூச்சிக்கொல்லி மருந்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்! - உண்மை கண்டறியும் குழு அதிர்ச்சித் தகவல்தற்கொலைக்கு காரணமாக இருக்கும் பூச்சிக்கொல்லிகள், சாணி பவுடர் போன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என கடந்த செப்டம்பர் 17-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினத்தன்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 6 பூச்சிக்கொல்லி மருத்துகளுக்கு தடை விதித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் என்னும் அபாயகரமான, விஷத்தன்மை வாய்ந்த எலி மருந்தை விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
நேற்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ``தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் (கோவை) சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு 60 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய பரிந்துரைத்தது.
தற்கொலைபூச்சிக்கொல்லி மருந்தைப் பாதுகாப்பாக அடியுங்கள்..! மாவட்ட ஆட்சியர் அறிவுரைவேளாண் இயக்குனரின் தரவுகளின் படி 2017-18-ம் ஆண்டில் தமிழகத்தில் விவசாயிகள் இறப்பிற்கான காரணம் பூச்சிக்கொல்லியில் இருக்கும் நச்சு பொருட்களால் நிகழ்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில், மோனோகுரோட்டோபாஸ், ப்ரொபெனோபஸ், அசிப்பேட், ப்ரொபெனோபஸ்+சைபர்மெத்ரின், க்ளோரோபைரிபோஸ்+ சைபர்மெத்ரின், க்ளோரோபைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சி கொல்லிகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக மஞ்சள் பாஸ்பரஸ் (3%) அதிகம் உள்ள ரடோல் எனப்படும் எலி மருந்திற்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது" என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.