தேவையானவை:
- குடல் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டிதக்காளி - 50 கிராம்
மிளகுத்தூள் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - சிறிதளவு.
குடலை நான்கு மணி நேரத்தில் குறைந்தது ஆறு முறையாவது சுத்தம் செய்யவும். கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம், கறிவேப்பிலையை வாசம் வர தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு கலந்து குடலை நன்கு வேக விடவும். பலமுறை சட்டியில் பிரட்டிக்கொண்டே இருக்கவேண்டும். வெந்து சுருண்டு வந்ததும் (இதுதான் பதம்) இறக்கி பரிமாறவும்.