சிக்கன் டிக்கா பார்பிகியு

Ennum Ezhuthum
0

 

சிக்கன் டிக்கா பார்பிகியு

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1 கிலோ
(ஷான்) சிக்கன் டிக்கா அல்லது பார்பிகியு மசாலா - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கெட்டி தயிர் - 100 மில்லி அல்லது 150 மில்லி
கசூரி மேத்தி - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சிறிது

செய்முறை :

சுத்தம் செய்து கட் செய்த சிக்கன், மசாலா, இஞ்சி பூண்டு, தயிர், சிறிது சுவைக்கு உப்பு, ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டி கசூரி மேத்தி பவுடர் சேர்த்து குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும். 

 

பார்பிகியு அடுப்பு ரெடியான வுடன் கம்பியில் அடுக்கியோ அல்லது கம்பி தட்டில் வைத்தோ இரு புறமும் சிவற வெந்து மணம் வர சுட்டு எடுக்கவும். சுவையான சிக்கன் டிக்கா பார்பிகியு ரெடி. விரும்பினால் லைம் பிழிந்து சாப்பிடலாம். இதனை வெஜிடபிள் சாலட்டுடன் பரிமாறவும். குபூஸ், ஹமூஸ், முத்தபல், கார்லிக் பேஸ்ட் உடனும் சாப்பிடவும் சுவை அருமையாக இருக்கும். செய்து ஃப்ரிட்ஜில் ஊற வைத்தால் மறு நாள் செய்யும் பொழுது ருசி அருமையாக சிக்கன் சாஃப்டாக இருக்கும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)