சேமிப்பு என்பது இன்றைக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை நீங்கள் சேர்த்து வைக்காவிடில் உங்களின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.
இதை மனதில் வைத்து நீங்கள் சேமிக்க வேண்டும் என்று நினைப்பில் இருந்தால், இதோ உங்களுக்காகவே நாடு முழுவதும் உள்ள வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் பல அரசாங்க சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. என்னென்ன உள்ளது? அதன் சிறப்பம்சங்கள்? வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக அறிந்துக்கொள்வோம்.
அரசாங்க சேமிப்புத்திட்டங்களின் பட்டியல்கள்:
தேசிய சேமிப்பு திட்டம் (மாதாந்திர வருமான திட்டம்): பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மாத மாதம் குறிப்பிட்ட அளவு பணம் கிடைக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் மாதாந்திர வருமான திட்டத்தில் உங்களது பணத்தை சேமிக்கத் தொடங்கலாம். தபால் நிலையங்களில் ஆரம்பிக்கப்படும் இந்த திட்டத்தின் முதிர்வு 5 ஆண்டுகளாகும். ஒற்றைக்கணக்கில் அதிகப்பட்சமாக ரூ. 9 லட்சமும், கூட்டுக்கணக்கில் ரூ. 15 லட்சமும் டெபாசிட் செய்துக் கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது. ஒரு ஆண்டிற்கு முன்கூட்டியே நீங்கள் சேமிப்புக் கணக்கை மூடலாம். அதே சமயம் 3 ஆண்டுகள் முடிவதற்குள் நீங்கள் சேமிப்பு கணக்கை மூடினால் வைப்புத்தொகையில் 2 சதவீதம் கழிக்கப்படும். ஒருவேளை 3 ஆண்டுகள் முடிந்த பிறகு சேமிப்பு கணக்கை மூடினால் வைப்புத்தொகையில் 1% கழிக்கப்படும்.
தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கு (National Savings Time Deposit Account):
1,2,3 மற்றும் 5 ஆண்டுகள் என டைம் டெபாசிட் கணக்குகள் என இந்த சேமிப்பு திட்டத்தில் 4 வகை உள்ளது. இத்திட்டத்திற்கு குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1000. அதிகபட்ச தொகை என்று அளவு கிடையாது. ஆறு மாதங்களுக்குப் பிறகு நீங்கள் இந்த சேமிப்புக் கணக்கை மூடிக்கொள்ளலாம். 5 ஆண்டு கால டெபாசிட்டுகள் வருமான வரிச் சட்டத்தின் 80-சி விலக்குக்கு தகுதி பெறுகின்றன.
இந்த திட்டத்தில் வட்டி விகிதமாக
1 ஆண்டுகள் - 6.60 சதவீதம்
2 ஆண்டுகள் - 6.80 சதவீதம்
3 ஆண்டுகள் - 6.90 சதவீதம்
5 ஆண்டுகள் - 7 சதவீதம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
முதியவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சேமிப்புத்திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம். தனியாகவே அல்லது மனைவியுடன் கூட்டாகவோ கணக்கைத் திறக்கலாம். 60 வயதை எட்டியவுடன் இந்த கணக்கைத் தொடங்கலாம். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் முடிந்த பிறகு கணக்கை மூடிக்கொள்ளலாம். வருமான வரிச்சட்டத்தின் 80 C-க்கு விலக்கு பெற தகுதியுடையவை. இதன் வட்டி விகிதம் ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2023 வரை 8 சதவீதமாக உள்ளது.
தேசிய சேமிப்பு பத்திரம்:
தேசிய சேமிப்பு பத்திர திட்டம் என்பது நிலையான வருமானத்தைத் தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். 18 வயதை எட்டியவுடன் இந்த கணக்கைத் தொடங்கலாம் அல்லது மைனர் சார்பாக பெற்றோர்கள் இத்திட்டத்தில் இணையலாம். 5 ஆண்டுகளில் முதிர்ச்சி வட்டி விகிதம் என்பது 7 சதவீதமாகும். இது பாதுகாப்பான மற்றும் ரிஸ்க் குறைவான திட்டமாக பார்க்கப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்:
பிபிஎப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்புத் திட்டத்தில் அனைத்துத் தரப்பட்ட மக்களும் இணைந்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் நிதியாண்டில் குறைந்த பட்ச வைப்புத்தொகையாக ரூ. 500 மற்றும் அதிக பட்ச வைப்புத் தொகையாக ரூ 1 50,000 ஆயிரம் வரை டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தின் கீழ், 3-வது நிதியாண்டு முதல் 6வது நிதியாண்டு வரை கடன் வசதி கிடைக்கும். இதோடு 7 வது நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கடனைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. வட்டி விகிதம் மார்ச் 31, 2023 வரை 7.1 சதவீதமாக உள்ளது
சுகன்யா சம்ரித்தி யோஜனா:
பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களில் முக்கியமானது சுகன்யா சம்ரித்தி யோஜனா. செல்வமகள் சேமிப்புத்திட்டம் எனக் கூறப்படுகிறது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 250 மற்றும் அதிகபட்ச வைப்புத்தொகையாக ரூ.1.5 லட்சம் டெபாசிட் செலுத்தலாம்.10 வயது வரை பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். கணக்கை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ஒரு தபால் அலுவலகம்/வங்கியில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றலாம். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கணக்கு முதிர்ச்சியடையும். ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
வட்டி விகிதம்: 7.6%. தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கியில் கணக்கை துவங்கி கொள்ளலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்:
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்பது இந்திய அரசின் பட்ஜெட் 2023ல் அறிவிக்கப்பட்ட ஒரு முறை புதிய சிறு சேமிப்புத் திட்டமாகும். இது பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் வசதியை 2 வருட காலத்திற்கு 7.5 சதவீத நிலையான வட்டி விகிதத்தில் ஓரளவு திரும்பப் பெறும் விருப்பத்துடன் வழங்கும் வகையில் அமைகிறது..
கிசான் விகாஸ் பத்ரா:
இந்திய அஞ்சலகத்தில் உள்ள முக்கியமான முதலீட்டு திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்திரம். அரசின் ஒரு பாதுகாப்பான, நிரந்தர வருவாய் தரக்கூடிய திட்டம். இந்த திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படும். முதலீட்டுத் தேதியிலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பின்வரும் விகிதங்களில் கேவிபியை பணமாக்கிக் கொள்ளலாம். வட்டி விகிதம் 7.2 சதவீதமாக உள்ளது.
தொடர் வைப்பு கணக்கு திட்டம் (RD):
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தொடர்ந்து சேமிக்கும் தொகைக்கு அதிக வட்டியைத் தரக்கூடிய முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டமாக உள்ளது ஆர்டி எனப்படும் தொடர்வு வைப்பு கணக்கு சேமிப்புத்திட்டம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. குறைந்தபட்சம் மாதம் ரூ. 100 டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்குப் பிறகு டெபாசிட் செய்பவரின் விருப்பப்படி முன்பணம் டெபாசிட் செய்யலாம். கணக்குத் தொடங்கி ஓராண்டிற்குப் பிறகு தற்போதுள்ள இருப்புத்தொகையில் 50 சதவீதம் வரை நீங்கள் திரும்பப் பெறலாம்.தற்போது, தபால் அலுவலக RD க்கு வட்டி விகிதம் 5.8% ஆகும்.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு:
இந்தத் திட்டத்தில், குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்ச டெபாசிட் வரம்பு இல்லை.ஒரு நபர் தனது சொந்த பெயரில் தனித்தனியாகவோ அல்லது ஒரு வயது வந்தவருடன் கூட்டாகவோ கணக்கைத் தொடங்கலாம். மைனர் சார்பாக கணக்கைத் திறக்கலாம்.10,000 ரூபாய் வரை கணக்கில் உள்ள வட்டி வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் வருமானத்திலிருந்து கழிக்கத் தகுதி பெறுகிறது. இதற்கான வட்டி விகிதங்கள் 4 சதவீதமாக உள்ளது.