கார சாரமான செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

Ennum Ezhuthum
0

 

கார சாரமான  செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

மிழ்நாட்டு உணவு முறைகளில் செட்டிநாடு சமையலுக்கு என தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் செட்டிநாடு ஸ்டைலில் சுவையான சிக்கன் குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - ½ கிலோ.
பெரிய வெங்காயம் - 2.
மீடியம் சைஸ் தக்காளி - 1.
சோம்பு - 1 ஸ்பூன்.
கசகசா - 1 ஸ்பூன்.
மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்.
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
சீரகம் - 1 ஸ்பூன்.
முந்திரி பருப்பு - 4.
இஞ்சி பூண்டு விழுது - 1½ ஸ்பூன்.
பட்டை சிறிய துண்டு - 1.
ஏலக்காய் - 2.
துருவிய தேங்காய் - 5 ஸ்பூன்.
புதினா தழை - 2 கொத்து.
கொத்தமல்லி தழை - 4 கொத்து.
எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்.
உப்பு - 1 ஸ்பூன்.
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

> சிக்கன் குழம்பு செய்வதற்கு முன், சிக்கனை பொடியாக நறுக்கி, அதில் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து சுத்தம் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும். இப்போது, வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

> குழம்புக்கான மசாலாவை தயார் செய்ய, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து. அதில், 2 சொட்டு எண்ணெய் விட்டு, சோம்பு, சீரகம், கசகசா, பட்டை, ஏலக்காய், துருவிய தேங்காய், 4 மிளகு ஆகியவற்றை வறுக்கவும்.

> வறுத்த மசாலாப்பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில், முந்திரி பருப்பு, கொத்தமல்லி தழை, புதினா தழை, பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

> இப்போது, குழம்பு தயார் செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கடுகு, நறுக்கி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதையடுத்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து பச்சை வாசனை நன்றாக வதக்கவும்.




> தக்காளி நன்கு மசிந்ததும், இதனுடன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி பின்னர் நாம் செய்து வைத்திருந்த சிக்கனை சேர்க்கவும். சிக்கனை நன்றாக வதங்கியவுடன், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடத்திற்கு பாத்திரத்தை மூடி வைக்கவும்.

> பின்னே, இதில் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு, 20 முதல் 30 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும். கறி நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். இப்போது, சுவையான செட்டிநாட்டு சிக்கன் குழம்பு தயார். சுவையை அதிகரிக்க சிறிது கொத்தமல்லி தலையை நறுக்கு சேர்த்துக்கொள்ளவும்

Post a Comment

0Comments

Post a Comment (0)