தேவை:
முருங்கைக்காய்: 2
கடலைப் பருப்பு: ½ கப்
வரமிளகாய்: 5
துருவிய தேங்காய் : ¼ கப்
சோம்பு: ½ ஸ்பூன்
சீரகம்: ¼ ஸ்பூன்
பட்டை: சிறிதளவு
வர மல்லி: ½ ஸ்பூன்
இஞ்சி: சிறிதளவு
பூண்டு: 3 பல்
மிளகாய் தூள்: தேவையான அளவு
கரம் மசாலா: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை 3 மணிநேரம் ஊறவைத்து நீர் போக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முருங்கைக்காயை வேகவைக்க வேண்டும். ஒரு வாணலியில் பட்டை, சோம்பு, வரமிளகாய், மல்லி, சீரகம், சோம்பு அனைத்தையும் மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு வெந்த முருங்கைக்காயின் சதைப் பகுதியை தனியாக எடுத்து நீர் போக பிழிந்து எடுத்து, சின்ன வெங்காயம், தேங்காய், இஞ்சி, பூண்டு, கடலைப் பருப்பு, மிளகாய் தூள், தேவையான உப்பை சேர்த்து நன்றாக மிக்சியில் நீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, சிறிது சிறிதாக உருண்டை பிடித்து மிதமான சூடான எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான கோலா உருண்டை தயார்.