உயர் ரத்த அழுத்தம் என்பது இதய தமனிகளுக்குள், சுவர்களுக்கு எதிராக ரத்த ஓட்டத்தின் அதிகப்படியான அழுத்தத்தால் குறிக்கப்படுவதாகும்.
எளிமையாக கூற வேண்டும் என்றால், ரத்த அழுத்தம் என்பது இதயத்தில் இருந்து தமனிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்யும் சக்திதான். சிறந்த இரத்த அழுத்த அளவீடு, 120/80 மி.மீ., பாதரசம் (mm Hg) குறைவாக இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையில் மாற்றம் இருந்தலோ அல்லது அதிகப்படியானோலோ அதனை மீண்டும கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியமாகும்.
ரத்த அழுத்தம் அதிகரிப்பது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். ரத்த ஓட்டத்தின் இந்த அதிகரிப்பு தமனிகளில் உள்ள மென்மையான திசுக்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இதனால் இதயத்திற்கு கடுமையான சேதம் ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்னென்ன?
ரத்த அழுத்தத்தில் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்புடன் வருகிறது. இவற்றைக் கண்காணிப்பது நிலைமையை நிர்வகிப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது, ஏனெனில் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, இதயம்தான் பெரிதும் பாதிக்கப்படும்.
மங்கலான அல்லது இரட்டைப் பார்வை, தலைச்சுற்றல்/மயக்கம், சோர்வு, நாள்பட்ட தலைவலி, இதயத் துடிப்பு, விவரிக்க முடியாத மூக்கடைப்பு, சரியாக சுவாசிக்க இயலாமை, குமட்டல், வாந்தி இவை ஏற்பட்டால், உங்கள் ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதன் சில அறிகுறிகளாகும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தவறாமல் உடற்பயிற்சி செய்தல்
தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய உடல்நல சிக்கல்களையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் நீரிழிவு மற்றும் பிற வகையான இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
உப்பை குறையுங்கள்
உயர் ரத்த அழுத்ததை தவிர்க்க, மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உணவில் அதிக உப்பு சேர்க்கக்கூடாது. சோடியம் உட்கொள்வது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்கும். அது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, உங்கள் உணவுகளுக்கு சுவை சேர்க்க மூலிகைகள், மசாலா பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்
உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய மற்றொரு ஆபத்து காரணி உடல் பருமன். அது எப்படி என்றால், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு, உள்ளுறுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது, இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இது நீண்ட காலத்திற்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுங்கள்
ஆம், உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். ஆய்வுகளின்படி, புகைபிடிப்பவர்களுக்கு ஆபத்தான உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம்.
மதுவை கட்டுக்குள் வைத்திருங்கள்
அதிக அளவு மது அருந்தினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இத்தகைய சிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாப்பது முக்கியம். மதுவை அதிகமாக குடிக்கக் கூடாது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்கள் ஒரு நாளைக்கு இரண்டு மதுபானங்களை உட்கொள்வதை கொள்ள வேண்டும். பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு மதுபானம் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
மனநிலையை சீராக வைத்திருங்கள்
ஆம், அதிக மன அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, மன அழுத்தத்தை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதை ஒருவர் புரிந்துகொள்வது அவசியம். தியானம் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுடன் பேசவும், வெளியே செல்லவும், வீட்டை விட்டு வெளியே சிறிது நேரம் செலவிடவும்.