ஸ்பெஷல் ரத்தப்பொரியல்

Ennum Ezhuthum
0

 

ஸ்பெஷல் ரத்தப்பொரியல்

தேவையான பொருட்கள்:

ஆட்டு இரத்தம் - 1 கப்
சின்ன வெங்காயம் - 150 கிராம்

பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - 1 கப்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள்-1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் ஆட்டு இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாயை மிக பொடியாக அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும். 

 

பின் கடாயில் அரிந்த பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்ததாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது பிசைந்து வைத்துள்ள இரத்தத்தை ஊற்றி,கொஞ்சம் கொத்தி விட வேண்டும். இரத்தம் கொஞ்சம் வெந்த பிறகு அதில் சிறிது மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து மீண்டும் கிளறி விட வேண்டும். மசாலாக்களின் காரத் தன்மை சென்ற பிறகு, இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை கிளறி அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான ஆட்டு ரத்தப் பொரியல் ரெடி.

Post a Comment

0Comments

Post a Comment (0)