மூலிகை செடிகளில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
எந்தெந்த மூலிகை செடிகளில் என்ன பலன்கள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் இதனை நாம் நம் வீட்டின் மாடித்தோட்டத்திலோ அல்லது பால்கனியில் கூட வளர்க்கலாம்.
துளசி: ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றுக்கு சிறந்தது. ரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
வில்வம்: காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக பயன்படுகிறது.
அறுகம்புல்: உடல் எடை குறைய, கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத் தளர்ச்சி நீங்க, ரத்தப் புற்றுநோய் குணமடைய ஏற்றது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் அறுகம்புல் சிறந்தது. தோல் வியாதிகள் அனைத்தும் அறுகம்புல்லில் நீங்கும்.
கல்யாண முருங்கை முள் முருங்கை: அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவும். காய்ச்சலைக் குறைக்கும். மாதவிடாய்த் தொல்லை நீங்கும். கிருமிகளை வெளியேற்றும், நீரிழிவு, சீதபேதி, வாதம் குணமடையும்.
கொத்தமல்லி: பசியைத் தூண்டும். பித்தம் குறையும், காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும். ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை கரைக்கவும், ரத்த அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு ஆகியவை குணமாகும்.
கறிவேப்பிலை: பேதி, சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல் கோளாறுகள் மறையும். பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றும். குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கறிவேப்பிலை போக்க உதவும்.
புதினா: சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும்.
புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ப் பொருள், உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினீக் ஆசிட், ரிபோபிளேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
கற்பூரவல்லி: மிகச் சிறந்த இருமல் நிவாரணி. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, இருமல் மறையும்.
வல்லாரை: எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழு நோய், யானைக்கால் வியாதி, நரம்புத் தளர்ச்சி, பேதி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது.
தூதுவளை: நரம்புத் தளர்ச்சி மறையும். மார்புச்சளி, தோல் வியாதிக்கு நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் சிறந்தது.
முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம் முதலியவற்றிற்கும் சிறந்தது.