ஹோட்டல் ஸ்டைலில் மொறுமொறு தோசை செய்ய ரெசிபி...

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner

 

ஹோட்டல் ஸ்டைலில் மொறுமொறு தோசை செய்ய ரெசிபி...

ரபரப்பான இந்த உலகில் ஆரோக்கியமாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வது என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
நீங்கள் எவ்வளவுதான் உடற்பயிற்சிகள் செய்தாலும் உணவு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இல்லாத வரை நம்மால் ஆரோக்கிய வாழ்வை வாழ முடியாது. எனவே ஹோட்டல்களில் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டு வீட்டிலேயே சாப்பிட்டால் ஆரோக்கியத்தை காக்கலாம். அந்த வகையில் ஹோட்டல் போல தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையானபொருள்கள்

புழுங்கல் அல்லது இட்லி அரிசி - 200 கிராம்

பச்சரிசி - 200 கிராம்

வெள்ளை முழு உளுந்து - 100 கிராம்

கடலைப் பருப்பு - 25 கிராம்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு



செய்முறை

1. புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

3. நடு நடுவே தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

4. பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விடவும். அதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்கவும்.

5. அப்படியே ஹோட்டல வாங்கும் தோசையை போலவே இருக்கும். இதை சட்னி, சாம்பாருடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்...

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 1, April 2025