வெறும் 10 நிமிடத்தில் குழந்தைகளுக்கு உத்வேகம் தரும் ஸ்வீட் கார்ன் சூப் செய்யலாம்!

Ennum Ezhuthum
0

 

வெறும் 10 நிமிடத்தில் குழந்தைகளுக்கு உத்வேகம் தரும் ஸ்வீட் கார்ன் சூப் செய்யலாம்!
ஸ்வீட் கார்ன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று.
நம்மில் பலர் வீடுகளில் மாலை அல்லது மதியம் வேளைகளில் என்ன சாப்பிடலாம் என்று உணரும் போது யோசிக்காமல் செய்யும் ஒரு விஷயம் ஸ்வீட் கார்ன். எப்பவும் போல ஸ்வீட் கார்னை வேகவைத்து சாப்பிடாமல், ஒரு சூப்பரான சூப் செய்தால் எப்படி இருக்கும்.

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சேளம், கேரட், பட்டாணி மற்றும் பல பொருட்களை சேர்த்து, சுவையான சூப் ஒன்றை மிகவும் எளிமையாக செய்வது எப்படி என காணலாம்.

தேவையான பொருட்கள் :

சோளம் - 1.
கேரட் - 2.
பட்டாணி - அரை கப்.
சோயா பீன்ஸ் - அரை கப்.
வெங்காயம் - 1.
சமையல் எண்ணெய் - தேவையான அளவு.




செய்முறை :

ஸ்வீட் கார்ன் சூப் செய்ய முதலில், உதிர்த்த சோளத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து, நன்கு அவிக்கவும். அதேநேரம், வெங்காயம் மற்றும் கேரட்டினை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அவித்த சோளத்தில் இருந்து 2 ஸ்பூன் சோளம் மட்டும் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள சோளத்தை, ஒரு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது, அதில் வேகவைத்த தண்ணீரை சேர்த்து மசித்து, கரைத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது சூப் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பட்டாணி, சோயா பீன்ஸ் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இதில் சோளம் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பாடல் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அதை நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீருடன் சேர்த்து காய்கறிகள் நன்கு வெந்துவிடும். பின்னர், கடைசியாக தனியே எடுத்து வைத்துள்ள 2 ஸ்பூன் சோளத்தையும் இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதிக்கும் சூப்பில் உங்கள் சுவைக்கு ஏற்ப வெள்ளை மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றிக்கொள்ளவும். பச்சை மனம் மாறும் நிலையில் அடுப்பை அணைத்துவிட சூடான சூப் ரெடி.

ஒரு பெரிய கிண்ணத்தில் இந்த சூப்பை ஊற்றி, அதன் மீது பொடிகளாக வெட்டிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து சூப்பினை சூடாக பரிமாறலாம். அழகிற்கு இதன் மீது வட்டமாக வெட்டிய வெங்காயத்தையும் சேர்க்கலாம்.


Post a Comment

0Comments

Post a Comment (0)