பண்டைய காலங்களில் மாரடைப்பு என்பது பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்பட்டு வந்தது. ஆனால் காலங்கள் மாற மாற நமது உணவுப்பழக்கம் பல்வேறு மாற்றங்களை அடைந்து தற்போது உடல் உழைப்பு இன்றி உழைத்து வரும் பல வேலைகளும் கிடைக்கின்றன.
இதனால் நாள் முழுக்க உட்கார்ந்தே பார்க்கும் வேலை, நாள் முழுக்க நின்றுகொண்டே பார்க்கும் வேலை என அந்த வேலைகள் சார்ந்த பிரச்சனைகளும் நமது உடலில் ஏற்படுகின்றன. இந்த நிலையில் தற்போது 18 வயது உள்ள இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.
தற்போது 39.8% பேர் உடல்பருமனுடன் இருக்கின்றனர். துரித உணவுகள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை காரணமாக இளவயது மரணங்கள் ஏற்படுவதாக தேசிய குடும்பநல ஆய்வக அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.