தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் பரவும் 4 வகையான காய்ச்சல்கள்... தப்பிக்க இதை பண்ணுங்க..!

Ennum Ezhuthum
0

 

தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் பரவும் 4 வகையான காய்ச்சல்கள்... தப்பிக்க இதை பண்ணுங்க..!

ல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய புலிக்கொசுக்கள் எனப்படும் ஏடிஸ் ஏஜிப்தி என்ற வகை கொசுக்களால் பரவுவது டெங்கு காய்ச்சல்.
காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாக கூறப்படுகின்றன. இனிப்பு சுவையுள்ள உணவுகளைக் குறைத்து, பாகற்காய் உள்ளிட்ட கசப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துக்கின்றனர்.

இதேபோல் மலேரியா காய்ச்சல், பெண் அனோபிலின் கொசு கடிப்பதால் பரவுகிறது. அவை ஒருவரின் ரத்த ஓட்டத்தில் நுழைந்து ரத்த சிவப்பணுக்களை பாதிக்கின்றன. காய்ச்சல், குளிர், தலைவலி, குமட்டல், வாந்தி ஆகியவை இவற்றின் பொதுவான அறிகுறிகள் ஆகும். காரமான உணவுகளை அறவே குறைத்து நீர்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

தாங்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைச் சரியாகவும், தவறாமலும் உட்கொள்வதன் மூலம் மலேரியா மற்றும் டெங்குவில் இருந்து மீளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கொசு ஒழிப்பே, இந்த காய்ச்சல்களில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு புறம் H3N2 இன்ஃப்ளூயன்சா. இந்த காய்ச்சலை காற்று மாசு தீவிரப்படுத்தும் என்பதால் மற்ற இன்ஃப்ளூயன்சா துணை வகை வைரஸ்களை காட்டிலும் வேகமாக பரவி வருகிறது.மூச்சு திணறல், நெஞ்சுப் பகுதியில் வலி, தலைசுற்றல், வலிப்பு போன்றவை இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கான அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன. ஹாங்காங் ப்ளூ எனப்படும் இன்புளுயன்சா காய்ச்சல் ஒரு வாரத்தில் விட்டாலும், இரண்டு, மூன்று வாரங்களுக்கு அதன் தாக்கம் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பெரும் அச்சுறுத்தலாக இருந்த கொரானாவின் திரிபான ஓமைக்ரான் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியா்த்தல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் ஓமைக்ரான் பரிசோதனை செய்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கூட்டமான இடங்களை தவிர்ப்பது உள்ளிட்ட கொ ரோனா தடுப்பு நடவடிக்கைகளே ஒமைக்ரான் மற்றும் H3N2 இன்ஃப்ளூயன்சா பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)