உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் அடை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!

Ennum Ezhuthum
0

 

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் அடை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் அடை வீட்டிலேயே எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

சுரைக்காய் உடல் உபாதைகளை சரிசெய்யும் சிறந்த மருத்துவ உணவாக இருக்கிறது. வாரம் ஒரு முறை சுரக்காய் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல், மூலநோய் விரைவில் குணமடையும்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 50 கிராம்

இட்லி அரிசி - 200 கிராம்

கடலைப்பருப்பு - 50 கிராம்

சுரைக்காய் - 100 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

மிளகாய் வத்தல் - 4

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

மஞ்சள் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் - தேவைக்கு ஏற்ப

கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

★பருப்பு வகைகள் மற்றும் இட்லி அரிசி இரண்டையும் நன்கு கழுவி தனித்தனியே மூன்று மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

★பின் சுரைக்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் பொடிபொடியாக நறுக்கி வைக்கவும்.

★சின்ன வெங்காயத்தை தோலுரித்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

★ஊறவைத்த பருப்பு, இட்லி அரிசியில் மிளகாய் வத்தல் மற்றும் உப்பு சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும்.

★அதனுடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

★அடுத்து அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து லேசாக நல்லெண்ணெய் தடவி சூடானதும் தோசைகளாக ஊற்றி எடுத்து வெந்தபின் பரிமாறினால் சுவையான சுரைக்காய் அடை தயார்.

★வெங்காய சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் இதனை பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)