இன்றுள்ள பலருக்கும் காலை எழுந்தவுடன் பற்களைத் துலக்கிவிட்டு டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்துவருகிறது.
ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின் இந்தியர்களிடையே ஏற்பட்ட மாற்றத்தில் இன்றுவரை கைவிடப்படாத பழக்கங்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது.
காலைநேரத்தில் எழுந்து வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது அமிலம் மற்றும் காரத்தன்மையில் ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தும். இதனால் அசிடிட்டி உருவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல வளர்ச்சிதை மாற்றம், செரிமான பிரச்சனைகள் போன்றவற்றையும் ஏற்படுகிறது. எனவே காலையில் எழுந்து டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது