தேவை:
துவரம் பருப்பு - 200 கிராம்
வெந்தயம் - அரை சிட்டிகை
உளுத்தம் பருப்பு - ஒரு சிட்டிகை
வரமிளகாய் - 5
மல்லி - 1 1/2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 20-25
கடுகு - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
பறங்கிக்காய்- கால் கிலோ (நறுக்கியது)
புளிச்சாறு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
முதலில் துவரம் பருப்பை சுத்தமாக நீரில் நன்கு கழுவி குக்கரில் வேக வைக்க வேண்டும். பின்னர் பறங்கிக்காயை பருப்புடன் சேர்த்து வேகவைத்து அதை மசித்து சேர்த்துக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் சுவையாக இருக்கும். பருப்பைக் கடைவதே அழகு. அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து, பின் வரமிளகாய், மல்லி, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி அரைக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடம் வதக்கவும். பிறகு தண்ணீர், புளிச்சாறு, நாட்டுச் சர்க்கரை, உப்பு சேர்த்து 4 - 5 நிமிடம் வதக்கி இறக்கவும். இறுதியில் மசித்து வைத்துள்ள பறங்கிக்காய், பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்துக் கிளறி, கொதிக்க வைத்தால் சாம்பார் தயார்! வேகவைத்த பருப்பும், மசித்த பறங்கிக்காயும்தான் கமகமக்கும் மணத்துக்கும் சுவைக்கும் காரணம்