புற்று நோய் முதல் எடை இழப்பு வரை... தினம் ஒரு எலுமிச்சை செய்யும் மாயங்கள்!

Ennum Ezhuthum
0

 

புற்று நோய் முதல் எடை இழப்பு வரை... தினம் ஒரு எலுமிச்சை செய்யும் மாயங்கள்!

கிட்டதட்ட அனைத்து வீடுகளிலும் சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பழவகைகளில் ஒன்று எலுமிச்சை. இவை பல்வேறு வடிவங்களில் நம்மால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஜூஸ் முதல் ஊறுகாய் வரை பல விதமாக நாம் எடுத்துக் கொள்கிறோம். அதன் தனித்துவமான புளிப்பு சுவையே எலுமிச்சையின் சிறப்பு. எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. சுவையில் புளிப்பான எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை அள்ளித் தருகிறது. அதிகம் வேண்டாம், ஒரே ஒரு எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இது ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஒரு பழம் என்றால் மிகையாகாது.

எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 100 கிராம் எலுமிச்சையில் 34 கலோரி உள்ளது. எலுமிச்சை டையூரிடிக் மற்றும் அதிக வைட்டமின் சி மற்றும் கனிம உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.

எலுமிச்சை சுவையில் புளிப்பாக இருந்தாலும், ஆரோக்கியத்தின் பல இனிமையான நன்மைகள் இதில் பொதிந்துள்ளன. எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலிக்கு தீர்வு தரும், மலச்சிக்கல் தீரும், தொண்டை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும், வாந்தியை நிறுத்தும். இப்படி இதன் பட்டியல் மிக நீளம்.

புற்று நோய்

நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்களுக்கு தரப்படும் சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது. மேலும் ஆரம்ப கட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காலையில் வெதுவெதுபான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது சிறந்த பலன் கொடுக்கும்.

கல்லீரலை பாதுகாக்கும்

கல்லீரலுக்கு எலுமிச்சை சிறந்தது, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து காலை உணவுக்கு முன் குடிக்கவும். கல்லீரலில் உள்ல நச்சுக்களை நீக்கிறது. இதுவும் செரிமானத்தை எளிதாக்கும். எலுமிச்சை குமட்டல், நெஞ்செரிச்சல், வீக்கம் போன்ற பல செரிமான கோளாறுகளை குறைக்க உதவும்.

செரிமான அமைப்பு

எலுமிச்சை சாப்பிடுவதால் உடலின் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். மேலும், எலுமிச்சை சாரைக் குடிப்பது உங்கள் உடலின் கூடுதல் கலோரிகள் அதிக அளவில் எரிக்கப்படுவதோடு, எடை இழப்பிற்கும் உதவுகிறது. எலுமிச்சை சாற்றில் இஞ்சி சாற்றை சிறிது சர்க்கரையுடன் கலந்து சாப்பிடுவது வயிற்று வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் எலுமிச்சை பழத்தை பிழிவது காய்கறிகளின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கிறது. இது உணவுகளை விரைவாக ஜீரணிக்கவும் உதவுகிறது.


நுரையீரல் தொற்று

ஆயுர்வேதத்தில் எலுமிச்சைக்கு சிறந்த முக்கியத்துவம் உண்டு. இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் எலுமிச்சை, ஆஸ்துமாவை குணப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

எடை இழப்பு

எலுமிச்சை சாரை குடிப்பது உங்கள் உடலில் கூடுதல் கலோரிகளை எரிப்பதோடு, எடை இழப்பிற்கும் உதவுகிறது. தொப்பை மற்றும் எடையைக் குறைக்க, தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், அதனுடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்க்கலாம். இது நிச்சயம் பலனளிக்க கூடியது

நீரிழிவு

ரத்ததில் அதிக சர்க்கரை உள்ளவர்களுக்கு எலுமிச்சைப் பழம் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. குறிப்பாக கோடையில் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்துவது (Blood Sugar Control) சவாலாக இருக்கும். இந்நிலையில், அவர்கள் எலுமிச்சை சாறு அருந்துவது சிறந்த பலனை அளிக்கும். எனினும் அதில் சர்க்கரைக்கு பதிலாக சிறிது உப்பு சேர்த்து அருந்துவது நல்லது.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

Post a Comment

0Comments

Post a Comment (0)