முருங்கை மசாலா பொரியல்

Ennum Ezhuthum
0

 

முருங்கை மசாலா பொரியல்

தேவையானவை:

முருங்கைக்காய் - 2,
பெரிய வெங்காயம் - ஒன்று,
தக்காளி - 2,

கத்திரிக்காய் - 4,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி. உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீரை வடிகட்டவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். கத்திரிக்காயும் சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கத்திரிக்காய் போட்டு கரம் மசாலாத்தூள், வெங்காயம், மிளகாய்த்தூள் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கி, வேக வைத்த முருங்கைத் துண்டுகளையும் போட்டு 10 நிமிடம் கிளறி இறக்கவும்

Post a Comment

0Comments

Post a Comment (0)