விதவிதமாக நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கு சமைத்து கொடுக்க ஆசை இருக்கும்.
ஆனால், அதற்கான ரெசிபி கிடைப்பதில்லை. அப்படி நீங்களும் புது புது
ரெசிபியை தேடுபவராக இருந்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு சூப்பரான ரெசிபியை
கூறுகிறோம்.
உங்களுக்குப் பேரிச்சம்பழம் பிடிக்குமா?.... இதை கீர், ஷேக், புட்டிங் அல்லது எதாவது இனிப்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஏனென்றால், இனிப்பு உணவுகளில் பேரிச்சம்பழத்தை துருவி அல்லது நறுக்கி சேர்ப்பது உணவின் சுவையை அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தை வைத்து ஒரு சூப்பரான துவையல் செய்தால் எப்படி இருக்கும் என நினைத்ததுண்டா?. இதற்கான ரெசிபியை நாங்கள் இங்கே உங்களுக்கு கூறுகிறோம்.
சட்னி முறை 1
தேவையான பொருட்கள் :
பேரிச்சம்பழம் - 200 கிராம்.
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்.
புளி - 20 கிராம்.
உப்பு - தேவையான அளவு.
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பேரிச்சம்பழத்தை ஊற வைக்கவும். அதே போல் மற்றொரு பாத்திரத்தில் புளியுடன் தண்ணீர் ஊற்றி அதை 3 - 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
இப்போது, ஊறிய பேரிச்சம்பழத்தில் இருக்கும் கொட்டைகளை நீக்கி, அதை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். கலவை கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
கடாயை வைத்து அது சூடானதும் அரைத்த பேரிச்சம் பழ விழுது, 1 டீஸ்பூன் சுக்கு பொடி, புளி கரைசல் மற்றும் 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, சட்னியை 5 நிமிடம் கொதிக்க விடவும். அவ்வளவு தான் இனிப்பு-புளிப்பு சுவை நிறைந்த பேரீச்சம்பழ சட்னி தயார். இதை பானிபூரி, சமோசா அல்லது பிரெட் பக்கோடாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சிவப்பு மிளகாய் தூள் காரம் நிறைந்தது. ஆகையால், இந்த சட்னியை குழந்தைகளுக்குக் கொடுத்தப்பதாக இருந்தால் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூளை பயன்படுத்தலாம். இதில் காரம் குறைவு மற்றும் சட்னிக்கு
துவையல் முறை - 2
தேவையான பொருட்கள் :
எலுமிச்சை - 1.
பேரிச்சம்பழம் - 100 கிராம்.
உலர்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் பேரீச்சம்பழத்தை சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
நன்கு ஊறியதும் அதிலிருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு பேரிச்சம்பழத்தை மட்டும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
இதில், 1 எலுமிச்சை பழத்தின் சாறு, 1 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். எலுமிச்சை பேரிச்சம்பழம் சட்னி இப்போது தயார்.
குறிப்பு : சட்னியில் சரியான அளவில் உப்பு சேர்க்க வேண்டும். ஒருவேளை உப்பு அதிகமாகி விட்டால் சட்னியின் மொத்த சுவையும் மாறிவிடும்.
இந்த சட்னியை எண்ணெயில் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்னி அரைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்த்து விடக் கூடாது.
கெட்டியான பதத்தில் சரியான அளவுகளுடன் சட்னியை அரைக்க வேண்டும். தண்ணீர் அதிகமானால் இஞ்சி சட்னி போல் மாறிவிடும்.
பயன்கள் :
பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.