வந்த வழியைப் பார்ப்போம்...

Ennum Ezhuthum
0

பூமியும் நாமும் எப்போது தோன்றினோம்? விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தில், பால்வளி மண்டலத்தில், ஒரு புள்ளி அளவே இடம் பெற்றுள்ள சூரிய குடும்பத்தில், நமது பூமிக்கான இடம் அணுவினும் குறைவானது. ஆனால் இதற்குள் அனுதினமும் அரங்கேறும் மூட கூத்துகளுக்குத்தான் அளவே இல்லை. 

இந்த பூமியும் நாமும் தோன்றி வளர்ந்த வரலாற்றை மிகச் சுருக்கமாகவேணும் தெரிந்து கொண்டால் இந்த மூடக் கூத்துகள் கொஞ்சமாவது குறையக்கூடும். 

ஹைப்பர் நோவாவிலிருந்து விண்டு விழுந்த சூரியன், அடுத்த பலகோடி ஆண்டுகளில் தானும் ஒரு சூப்பர் நோவாவாக பருத்து வெடித்து சிதறிய போது, இந்த பூமியும் அதிலிருந்து பிய்ந்து தூர விழுந்து, குளிர்ந்து சுருங்கி, உள்ளே குமுறும் நெருப்புக் கடலும், வெளியே நிலமும் நீருமாய் உருண்டு திரண்டு ஒரு சிறு கோளாய் மாறி, அதே சூரியனை அன்றாடம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. 

இப்படி இந்த பூமி தோன்றி இன்றைக்கு சும்மர் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இதில் முதன் முதலில் தோன்றிய நிலப்பரப்பு ஒரே பகுதியாகத்தான் இருந்தது. பிறபகுதி முழுவதும் கடலாய் நின்றது. 

முதலில் தோன்றியிருந்த நிலப்பரப்பு, தாயின் கருவில் தூங்கும் குழந்தையைப் போன்ற தோற்றத்தில் கூனிக் குவிந்து இருந்தது. இந்த நிலப்பகுதியை, பாஞ்சையா [ பாண்டியா?] எனக் குறிப்பிட்டனர் புவியியலாளர்கள். இதிலிருந்து முதன் முதலில் வட அமெரிக்க கண்டம் பிரிந்தது. இந்த பிரிவிற்குப்பின் நிலைத்திருந்த பெரு நிலப்பரப்பு கோண்டுவானா எனப்பட்டது.

 இதிலிருந்து வடக்கில் உலராசியா பிரிய, எஞ்சிய கோண்டு வானாவின் மையப் பகுதியாய் இருந்தது (லெமூரியா எனப்பட்ட ) குமரிக்கண்டமாகும். இப்படி உருவான இந்த பூமியின் நிலம் மற்றும் நீர் பரப்பில் பலவகையான உயிரினங்கள் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வந்தபோது, சுமார் ஒருகோடி ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்ட பகுதியில், மனித இனம் உருவாவதற்கான சூழல் உருவானது. 

அப்போது பரிணமித்திருந்த குரங்கு இனத்தில், ஒருவகைக் குரங்கினம் உயரமாக வளர்ந்து நிமிர்ந்து நடக்கும் நிலையை அடைந்தது. இந்த அரிய வகைக் குரங்கினமே சுமார் 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனமாக உருவெடுத்து பூமியின் தென்பகுதி முழுவதும் பல்கிப் பெருகிப் பரவியது. இந்த ஆதி மனிதர்கள், மேற்கே தென் அமெரிக்கா முதல் கிழக்கே நியூசிலாந்து வரை காலம் காலமாகப் பரவிவந்தனர். 

இப்படிப் பரவி வந்த மனித இனத்துள், குமரிக் கண்டப்பகுதியில் நிலைத்து வாழ்ந்த மக்கள், வேட்டையாடுவதிலிருந்து வேளாண்மை செய்யவும், குரல் எழுப்புவதிலிருந்து பேசவும், எழுதவும், ஆடை நெய்து அணியவும் கற்றுக்கொண்ட இனமாக உருவெடுத்த உலகின் மூத்த குடிமக்களாவர். இவர்கள் சுமார் ஒருலட்சம் ஆண்டு மொழி வரலாற்றைத் தமக்கெனத் தனியே கொண்டுள்ள நமது தமிழ் மக்கள் ஆவர். 

கடைசியாக உள்ள இந்த ஒரு லட்சம் ஆண்டுகளே ஒட்டுமொத்த மனித வரலாற்றையும் நாகரிக எல்லைக்குள் கொண்டுவந்து சேர்த்த பொற்காலமாகும். இந்த கருதுகோளே உலக வரலாற்றை அளவிட அறிவியளாளர் பயன்படுத்தும் காலக் கண்ணாடியுமாகும் !

Post a Comment

0Comments

Post a Comment (0)