நிலாவுக்கு போறவங்க இவங்கதானா.. பெயர்களை வெளியிட்ட நாசா

Ennum Ezhuthum
0

 

NO:1.. நிலாவுக்கு போறவங்க இவங்கதானா.. முதல் பெண் மற்றும் கருப்பினத்தவரின் பெயர்களை வெளியிட்ட நாசா

 

ஆர்ட்டெமிஸ் 2 என்ற விண்கலத்தின் மூலம் நிலவுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது..

அத்துடன், நாசாவின் வரலாற்றில் பெண் ஒருவர் விண்வெளிப் பயணத்திற்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.

மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப பல காலமாகவே, விஞ்ஞானிகள் திட்டமிட்டு வரும்நிலையில், அதுகுறித்த செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நாசாவின் "ஆர்ட்டெமிஸ் 1" திட்டம் வெற்றிகரமாக முடிந்தது.. ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் வெற்றியை தொடர்ந்து மறுபடியும் நிலவுக்கு அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு கொண்டிருக்கிறது..


நாசா திட்டம்

இதன் அடுத்த முயற்சியாக ஆர்ட்டெமிஸ் II திட்டத்திற்கு நாசா தயாராகி வருகிறது... இந்த ஆர்ட்டெமிஸ் II திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவு சுற்றுப் பாதைக்கு சென்று திரும்புவார்கள். ஆர்ட்டெமிஸ் 2 என்ற இந்த நிலவுக்கு செல்லும் ஆய்வு திட்டத்தை நாசா கடந்த சில ஆண்டுகளாக வழி நடத்தி வருகிறது. இந்த திட்டத்தை, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் விண்வெளி நிறுவனம், போன்றவற்றுடன் இணைந்து செயல்படுத்துகிறது. ஆர்ட்டெமிஸ் 2 மூலம்தான், வரும் 2025ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப போவதால் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன..


4 பேர்

கடந்த 1972ம் ஆண்டுக்கு பிறகு மறுபடியும், ஆர்ட்டெமிஸ் 2 என்ற விண்கலத்தின் மூலம் நிலவுக்கு செல்ல போகிறார்கள்.. அந்த நபர்களின் பெயர்களை நாசா முதல் முதலாக வெளியிட்டுள்ளது. இதற்காக 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழுவை நாசா மற்றும் கனேடியன் விண்வெளி நிலையம் ஏப்ரல் 3-ம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.. இந்நிலையில், ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட்வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மாக் கோச் ஆகிய 4 விண்வெளி வீரர்கள்தான் நிலவு சுற்று பாதைக்கு சென்று திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி (CSA) வீரர் ஆகியோர் அடங்குவர்.


ஓரியன் விண்கலம்

ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் நிலவில் வீரர்கள் இறங்கி நீண்ட காலம் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.. அதுமட்டுமல்ல, ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் எஸ்எல்எஸ், விண்வெளி ஏவுதல் ராக்கெட் மூலம் ஆளில்லா ஓரியன் விண்கலம் அனுப்பபட்டதுபோல், ஆர்ட்டெமிஸ் II திட்டத்திலும் சோதனை செய்யப்படுகின்றன... அதாவது, மனிதர்களுக்கு இந்த கருவிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை சோதனை செய்ய போகிறார்கள்.. நாசாவின் வரலாற்றில் கருப்பின பெண் ஒருவர் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

ஆட்டெமிஸ் 2

ஆர்ட்டெமிஸ் 2 இன்னும் 10 நாட்களில் பறக்கும் சோதனையை தொடங்கும் என நாசா தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாதங்களில் இந்த நான்கு பேரும் ஆர்ட்டெமிஸ் 2 விமானம் மூலம் சந்திர மண்டலத்தை அடைவார்கள். செவ்வாயில் இருந்தால் எப்படி இருக்குமோ, அதுமாதிரியே, உணர்வளிக்கக் கூடிய இருப்பிடத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்களாம்.. இந்த இடத்தில் 4 பேரும், ஒரு வருட காலத்துக்கு தங்க வைக்கப்படுவதாகவும், அந்த இடத்திலேயே பணியாளர் குடியிருப்புகள், ஒரு கிச்சன், மெடிக்கல் ரூம், பொழுதுபோக்கு, ஜிம், பயிர் வளர்ச்சி போன்றவைகளுக்கு தனித்தனியான இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.. அத்துடன், அத்துடன் தொழில்நுட்ப வேலை பகுதி, 2 பாத்ரூம்கள், அடங்கிய 3டி பிரிண்டட் தங்குமிடங்களை உருவாக்கவும் திட்டமிருப்பதாகவும், சொன்னார்கள்.


இந்த அனலாக் மிஷன் மூலம் துல்லியமான தரவுகளை பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். மாதிரி செவ்வாய் கிரகம் உருவாக்கப்படும்போதே இவர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளதாக நாசாவும் கூறியிருந்தது இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. ஆக, 50 வருடங்கள் கழித்து நிலவுக்கு 4 வீரர்கள் செல்லவுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை உலகமெங்கும் ஏற்படுத்தி வருகிறது. இந்தக் குழுவில் ஒரு பெண் இருக்கிறார் என்பது மட்டுமல்ல, நிலவுக்குச் செல்லும் வீரர்கள் குழுவில் கனடா விண்வெளி வீரர் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார் என்பதும், இதில் ஒரு கறுப்பின வம்சாவளி வீரரும் இருக்கிறார் என்பதும் உலக மக்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளன.

Post a Comment

0Comments

Post a Comment (0)