எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான முட்டை பேராபத்து!

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner

 

எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான முட்டை பேராபத்து!

முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

 

முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உடலை வலுவாக்குகின்றன. அதோடு முட்டையின் வெள்ளைக்கருவில் கொழுப்பு இல்லை. முட்டையில் அதிக புரதம் உள்ளது. இதில் புரத சத்தை தவிர, வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை உள்ளன. இதில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும், சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். எனவே அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சிறுநீரக பாதிப்பு

கோடையில் முட்டைகளை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கிறது. முட்டையில் புரதச்சத்து நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் முட்டைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். முட்டையிலும் அப்படித்தான். முட்டையை அளவோடு சாப்பிடுவது நல்லது. அதிக முட்டைகளை சாப்பிடுவது வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், நம் உடல் பலவீனமடையத் தொடங்கும்.


நீரிழிவு ஆபத்து

முட்டைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலில் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அதிக முட்டைகளை சாப்பிடுவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவையும் ஃபேட் அளவையும் அதிகரிக்கும். நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​நம் உடலில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். சர்க்கரை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஒரு நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்.

மலச்சிக்கல்

அளவிற்கு அதிக முட்டைகளை சாப்பிடுவது நமது செரிமான அமைப்பை நேரடியாக பாதிக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், வயிற்றில் எரிச்சல் மற்றும் வாயு பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் இருக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 29, March 2025