எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாம் நபர் குழுவைக் கொண்டு மதிப்பீடு செய்வதை கைவிட கோரிக்கை

Ennum Ezhuthum
0


 💥எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாம் நபர் குழுவைக் கொண்டு மதிப்பீடு செய்வதை கைவிட கோரிக்கை.

        💥தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம் படுதோல்வி அடைந்த திட்டம். மாணவர்களுக்கு முற்றிலும்  பயன்படாத திட்டம் என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பலமுறை அழுத்தமான கருத்தை பதிவு செய்துள்ளது.வெற்று விளம்பரத்தால் மட்டுமே திட்டம் சிறப்பாக உள்ளது போல் தோற்றமளிக்க கல்வித்துறை அலுவலர்கள் முயற்சிக்கின்றனர்.

       💥இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நேரம் வீணாகின்றது.ஆசிரியர்களும் மாணவர்களும் மன உளைச்சலில் உள்ளனர்.மதிப்பீடு செய்வது,தேர்வு வைப்பது என செல்போனோடு போராட்டம் நடத்துவதிலேயே காலவிரயம் ஆகின்றது.

        💥இந்நிலையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க B.Ed பயிற்சிபெற்றுவரும் மாணவர்களை பயன்படுத்தவேண்டும் என மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் உயர்கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இது 25,30,35 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் உள்ள  ஆசிரியர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் செயல்.BRT,BEO,DEO,CEO,JD,DIRECTOR,EDUCATION SECRETARY பார்க்காததை,சோதிக்காததை,கண்டுபிடிக்காத குற்றத்தை,சொல்லாத யோசனையை பயிற்சிபெற்றுவரும் மாணவர் திறமையாக செயல்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றியடையச்செய்வார் என கல்வித்துறை நினைத்தால் இந்த எண்ணம் படு தோல்வியில் முடிந்து எதிர்விளைவை உறுதியாகக் கொடுக்கும்.

        💥பயிற்சி மாணவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 28.8.2023 to 31.8.2023 வரை மூன்று நாள் பயிற்சி வழங்கப்பட்டு 1.9.2023 to 15.9.2023 வரை 1-3 வகுப்பு மாணவர்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்புவதாக திட்டம்.SCERT இதுபோன்ற மூன்றாம் நபர் குழு என்ற திட்டத்தின் மூலம்  ஆசிரியர்களை அவமானப்படுத்துகின்ற விபரீத செயல்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடுமையான போராட்டத்தை நடத்தும் என்பதை தமிழக அரசு மற்றும்  கல்வித்துறையின்  கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

💥By வி.எஸ்.முத்துராமசாமி,பொதுச்செயலாளர்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


Post a Comment

0Comments

Post a Comment (0)