தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம்?. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை.!!!

Ennum Ezhuthum
0


 மிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.


அதன்படி அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் காலை உணவை தவிர்த்து விட்டு பலரும் பள்ளிக்கு வருவதால் அதனை கருதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் ஒரு சில மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவுகள் குறித்து அரசு பட்டியலிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் உரிய குழுக்கள் அமைக்கப்பட்ட அதன் மூலம் திட்டம் குறித்து அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசில் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகளை போல அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றது. இதனால் காலை சிற்றுண்டி திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)