எண்ணும் எழுத்து திட்ட ஆசிரியர்களை மதிப்பீடு செய்ய பி.எட்., மாணவர்கள் நியமனம்: ஆசிரியர்கள் கொதிப்பு

Ennum Ezhuthum
0


 கல்வித்துறையில் எண்ணும் எழுத்தும் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை மதிப்பீடு செய்ய பி.எட்., மாணவர்களை நியமித்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி ஆசிரியர்கள் மாநில அளவில் போராட்டம் அறிவித்துள்ளனர்.கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்க தொடக்க பள்ளி மாணவர்களுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் சகஜ நிலை திரும்பி பள்ளிகள் திறக்கப்பட்டும் இத்திட்டம் மட்டும் தொடர்கிறது. 1-3 ம் வகுப்பு வரை செயல்படுத்திய இத்திட்டம் தற்போது 5ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு, அலைபேசி செயலி பயன்பாடு போன்றவற்றால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் வழக்கமான கற்பிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அதிகரிக்கும் மனஉளைச்சல் மேலும் ஆன்லைன் தேர்வில் தமிழுக்கு பதில் மலையாளம், ஹிந்தி மொழியில் வினாக்கள் இடம் பெறுவதால் அடிக்கடி குழப்பம் ஏற்படுகிறது. படம் வரைதல், வெட்டுதல், ஒட்டுதல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட உபகரணம் தயாரிப்பு பணிகளால் ஆசிரியர்களின் பணிப்பளு பலமடங்கு அதிகரித்து உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் அதிகாரிகள் அளிக்கும் புள்ளிவிபரங்களை நம்பி இத்திட்டத்தை தி.மு.க., அரசு பெரும் சாதனையாக குறிப்பிட்டு, ரூ.

பல கோடி நிதி ஒதுக்கீடு செய்து வரும் நிலையில் 'இத்திட்டத்தால் 2 ஆண்டுகள் தொடக்க கல்வி மாணவர்கள் கல்வி முன்னேற்றம் தடையாக உள்ளது என்ற ஆசிரியர்கள் கருத்து தான் எதார்த்தம்' என கல்வியாளர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.இச்சூழலில் தான் எண்ணும் எழுத்துத் திட்டத்தை தனியார் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., படிக்கும் மாணவர்கள் மூலம் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் மதிப்பீடு செய்ய எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.முதல்வர் தலையிட வேண்டும் இதுதொடர்பாக உயர்கல்வி செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த உத்தரவை உடன் திரும்ப பெற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: இயக்குநரின் உத்தரவு மாநிலம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை மதிப்பீடு செய்யும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.ஆனால் எந்த துறையிலும் இல்லாத வகையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் கற்பித்தலை, பி.எட்., படிப்பை நிறைவு செய்யாத மாணவர்கள் மதிப்பீடு செய்வது உளவியல் ரீதியாக ஆசிரியர்களை பாதிக்கும்.

ஆசிரியர்களின் கற்பித்தலை அவமதிக்கும் செயல். ஆசிரியர்களுக்கு எதிரான இந்த உத்தரவை உடன் திரும்ப பெற வேண்டும். இதை கண்டித்து இன்று (ஆக.,30) முதல் போராட்டம் நடக்க உள்ளது. முதல்நாளில் அனைத்து சி.இ.ஓ., அலுவலகங்களிலும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. ஆசிரியர்களின் மனநிலையை முதல்வர் ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும், என்றார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)