2023-2024
தொகுத்தறி மதிப்பீடு முதல் பருவம்
1-3 ஆம் வகுப்பு
தேதி-20-09-2023 முதல் 27-09-2023 வரை.
செயலி வழியாக
அவரவர் கற்றல் நிலைக்கு ஏற்ப 5 கேள்விகள்.
4-5 ஆம் வகுப்பு
தேதி-20-09-2023 முதல் 27-09-2023 வரை.
எழுத்து தேர்வு
எண்ணும் எழுத்தும் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 20.09.23 அன்று முதல் 27.09.23 வரை செயலி மூலம் நடத்திட வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் அவரவர் நிலைக்கேற்றவாறு 5 கேள்விகள் மட்டுமே செயலியில் இடம்பெறும்.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு நிர்வாக காரணங்களுக்காக எழுத்துத் தேர்வாக (pen and paper test) மட்டுமே 20.09.23 முதல் 27.09.23 வரை மேற்கொள்ள வேண்டும். எழுத்து தேர்விற்கான வினாத்தாள்கள் Pdf வடிவில் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள்களை செயலியில்
பதிவிறக்கம் செய்து தொகுத்தறி மதிப்பீட்டினைமேற்கொள்ளலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.