தற்காலிக ஆசிரியா்களுக்கு 5 ஆண்டு பணி நீட்டிப்பு ஆணை.!

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner
குட் நியூஸ்.! தற்காலிக ஆசிரியா்களுக்கு 5 ஆண்டு பணி நீட்டிப்பு ஆணை.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு.!

 ற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 900 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 1,812 ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணையில்; 2008-09, 2009-10 மற்றும் 2010-2011 ஆம் கல்வியாண்டுகளில் நிலையுயர்த்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை பிரித்து துவக்கப்பட்ட அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 1512 தற்காலிக பணியிடங்களில், 912 தற்காலிகப் பணியிடங்களுக்கு (330 பட்டதாரி ஆசிரியர், 575 முதுகலை ஆசிரியர் மற்றும் 7 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள்) கடைசியாக 01.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 912 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட தற்காலிக நீட்டிப்பு 31.12.2022 உடன் முடிவடைந்துள்ளதால், இப்பணியிடங்களுக்கு 01.01.2023 முதல் 31.12.2027 வரை மேலும் ஐந்தாண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


ads banner
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 29, March 2025