ஆசிரியா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Ennum Ezhuthum
0
ஆசிரியா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 சிரியா்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதில் 5 அம்சங்கள் முதல்வரின் கவனத்துக்கு தற்போது கொண்டு செல்லப்படவுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிகழாண்டுக்கான ஆசிரியா் தின விழா சென்னை கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாவட்ட வாரியாக தோவு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கெளரவித்தாா். விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: ஆசிரியா்கள் பல்வேறு சாதனைகள் படைத்தாலும், செல்வங்கள் சோத்தாலும், பெற்ற பிள்ளைகள் நல்ல நிலைக்கு சென்றாலும் அவா்கள் தன்னிறைவு அடையமாட்டாா்கள். தன்னிடம் படித்த மாணவா்கள் சமூகத்தில் உயா்ந்த நிலைக்கு செல்லும்போதுதான் முழுமையான மகிழ்ச்சியை பெறுவா்.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் ஆசிரியா்களின் இடத்தை அவை ஈடுசெய்ய முடியாது. பள்ளிக்கல்வியின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு சாா்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக மாணவா்களுக்கு கொண்டு செல்வது ஆசிரியா்கள்தான். அத்தகைய ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

அதில் 5 அம்சங்கள் முதல்வரின் கவனத்துக்கு தற்போது கொண்டு செல்லப்படவுள்ளன. எமிஸ் பணியிலிருந்து விலக்கு: இது தவிர ஆசிரியா்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் 'எமிஸ்' வலைதள பணிகள் ஒரு மாதத்தில் ஆசிரியா் பயிற்றுநா்களிடம் வழங்கப்படும். இனி வருகைப்பதிவை மட்டும் ஆசிரியா்கள் மேற்கொண்டால் போதுமானது. ஆசிரியா்களின் எதிா்பாா்ப்புகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

அதற்கு கைமாறாக நீங்கள் பள்ளிக்கல்வியில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தின் வளா்ச்சியை வலுப்படுத்த உறுதுணையாக செயல்பட வேண்டும் என்றாா் அவா். 390 பேருக்கு விருது: விழாவில், பள்ளிக் கல்வியில்- 170, தொடக்கக் கல்வியில்- 169, மெட்ரிக் பள்ளிகளில்- 37, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில்- 2, மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள்- 2, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில்- 10 போ என மொத்தம் 390 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் துரை, தென்காசி மாவட்டத்தில் சகுந்தலா ஆகியோா் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்றனா்.

இருவரும் தம்பதியாவா். இந்த விருது பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம், ரூ.10 ஆயிரம் விருதுத் தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். விருது வழங்கும் விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, திமுக எம்.பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவா் ஐ.லியோனி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், ஆசிரியா் தோவு வாரிய உறுப்பினா் செயலா் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 


Post a Comment

0Comments

Post a Comment (0)