தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு முன்கூட்டியே பாடநூல்கள் - கல்வித் துறை நடவடிக்கை
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2023-2024) பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்க வசதியாக வரும் ஏப்ரலில் அவா்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பொதுத் தோ்வுக்குத் தயாராகும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் கோடை விடுமுறையில் படிப்பதற்காக மூத்த மாணவா்களிடம் புத்தகங்கள் வாங்கி படிப்பது வழக்கம். பல பள்ளிகளில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கிவிடுவா்.
இதை கருத்தில் கொண்டு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்கூட்டியே பாடநூல்கள் வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியது: ஆண்டுதோறும் ஒன்றாம் முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்களுக்காக ஐந்து கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இந்த இரு வகுப்புகளுக்காக 30-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடநூல்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் வரும் மாா்ச்சில் முடிவடையும். இதையடுத்து ஏப்ரலில் புத்தகங்கள் விற்பனை தொடங்கும். அதனால் அடுத்தக் கல்வி ஆண்டில் பொதுத் தோ்வு எதிா்கொள்ளவிருக்கும் மாணவா்கள் இந்த கோடை விடுமுறை முதலே தயாராகலாம்.
மற்ற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, மாநில கவுன்சிலில் இருந்து குறுந்தகடுகளைப் பெற்ற பிறகு விரைவில் தொடங்கும். ஆண்டு அட்டவணையின்படி எல்லா மாவட்ட பள்ளிகளுக்கும் மே இரண்டாவது அல்லது மூன்றாம் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும் என்றனா்.
Advance Textbooks for Plus 2, Class 10th in Tamil Nadu - Action by Education Department
In the coming academic year (2023-2024) in Tamil Nadu, the school education department officials said that the books will be provided to the Plus 2 and 10th class students in April to help them study their subjects in advance. Students of Plus 2 and 10th who are preparing for public examination usually buy books from senior students to study during summer vacation. Start taking classes at multiple schools.
Keeping this in mind, it has been decided to provide textbooks to the students of Public Writing in advance of the start of the new academic year. Officials said about this: Five crore books are being printed annually for the students studying from Class I to Plus II.
In this case, the work of printing textbooks for Plus 2 and 10th classes started in December last year. Textbooks on more than 30 topics are being printed for these two classes. These works will be completed by March. After that, the books will start selling in April. So the students who are going to take the public examination in the next academic year can prepare from this summer vacation.
The printing of textbooks for other classes will start soon after receiving the CDs from the State Council. According to the annual schedule, books will be sent to all district schools in the second or third week of May.